Published:Updated:

இடும்பாவனம் கார்த்தி... ஒய்.எஸ் ஜெகன்... உதவிக்கு ட்விட்டரில் உடனடி ரெஸ்பான்ஸ் காட்டும் எடப்பாடி!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் உதவி கோரி யார் பதிவு போட்டாலும், உடனடியாக அவர்களது பதிவை டேக் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி மேற்கொள்ள வழி செய்கிறார். மேலும் சம்பந்தப்பட்டவர்களின் ட்விட்டர் பதிவுக்கும் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்கிறார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 90,824 பேர் இருக்கிறார்கள். அரசு கண்காணிப்பில் 127 பேர் இருக்கும் நிலையில், 10,814 பேருக்கு 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்திருக்கிறது. இதுவரை மொத்தம் 4,612 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 571 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நேற்று மட்டும் 86 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 85 பேர் ஒரே மாநாட்டில் பங்கேற்றவர்கள். மற்றொருவர் துபாயில் இருந்து நாடு திரும்பியவர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485-ல் இருந்து 571 ஆக அதிகரித்திருக்கிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும், 21 நாள் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு நிலையான மக்கள் உணவுக்கு வழியில்லாமல் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு சில சமூக ஆர்வலர்கள் உதவி வருகின்றனர்.

இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் உதவி கோரி யார் பதிவு போட்டாலும், உடனடியாக அவர்களது பதிவை டேக் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவி மேற்கொள்ள வழி செய்கிறார். மேலும், சம்பந்தப்பட்டவர்களின் ட்விட்டர் பதிவுக்கும் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்கிறார்.

இடும்பாவனம் கார்த்தி... ஒய்.எஸ் ஜெகன்... உதவிக்கு ட்விட்டரில் உடனடி ரெஸ்பான்ஸ் காட்டும் எடப்பாடி!

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ``இடும்பாவனம், அடஞ்சவிளாகம் பகுதியில் குடிசைகள் அமைத்து பிழைத்து வரும் 40-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் உணவுக்கே வழியின்றி சில நாள்களாக அல்லாடி வருகின்றனர். அரசும், அதிகாரிகளும் இதைக் கவனமெடுத்து உடனடியாக அவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கோருகிறோம்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதை பதிவிட்ட சில மணிநேரங்களில் ட்விட்டரில் கார்த்தியை டேக் செய்து உதவி தேவைப்படும் நரிக்குறவ மக்களின் செல்போன் எண்ணை வாங்கி சில மணிநேரங்களில் அவர்களுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டு சேர்த்து அந்தப் புகைப்படத்தை தனது பக்கத்தில் பதியவும் செய்தார். இதேபோல் ஆந்திராவில் தவிக்கும் தமிழக குடும்பங்களுக்கு உதவிகோரி ஒருவர் பதிவிட அதை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்துக்கு எடப்பாடி கொண்டு செல்ல சிலமணி நேரங்களில் அவர்களுக்கும் உதவி கிடைத்தது.

இடும்பாவனம் கார்த்தி... ஒய்.எஸ் ஜெகன்... உதவிக்கு ட்விட்டரில் உடனடி ரெஸ்பான்ஸ் காட்டும் எடப்பாடி!

இதுமட்டுமல்ல மற்றவர்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருவதையும் குறிப்பிட்டுப் பாராட்ட தவறவில்லை. இப்படி நேற்று லாக்டவுணால் உதவி தேவைப்படுவோர் குறித்த பதிவுகளுக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் நேற்று உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்யப்பட்டது வரவேற்பை பெற்றுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு