Published:Updated:

ஆரணி: ஃபுரூட் மிக்ஸ் குடித்த தொழிலாளிகளுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தொழிலாளிகள்

ஃபுரூட் மிக்ஸ் குடித்த குழந்தைகள் உட்பட 18 பேர் வாந்தி, மயக்கத்தால் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஜூஸ் கடை உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆரணி: ஃபுரூட் மிக்ஸ் குடித்த தொழிலாளிகளுக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஃபுரூட் மிக்ஸ் குடித்த குழந்தைகள் உட்பட 18 பேர் வாந்தி, மயக்கத்தால் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஜூஸ் கடை உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Published:Updated:
தொழிலாளிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரது நிலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சிறார்கள், மஞ்சுளா, சாந்தி உள்ளிட்ட 24 கூலித் தொழிலாளிகள் நேற்று முன்தினம் (02.05.2022) வயல்வெளி வேலையில் ஈடுபட்டுள்ளனர். மதிய நேரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், களம்பூர் பகுதியிலுள்ள ஒரு ஜூஸ் கடையிலிருந்து ஃபுரூட் மிக்ஸ் வாங்கி வந்து அனைத்து கூலித் தொழிலாளிகளுக்கும் அருந்தக் கொடுத்திருக்கிறார் குமரேசன்.

ஆரணி
ஆரணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின், வேலையை முடித்து வீட்டுக்குச் சென்ற ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள், மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை மீண்டும் வேலைக்குச் சென்றவர்களுக்கு வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களும் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறுவர்கள் உட்பட மொத்தம் 18 பேரும் ஒரே மாதிரியான காரணங்களால் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட குளிர்பானத்தை அருந்தியதாக தெரிவித்துள்ளனர். பிறகு, 18 பேரும் மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் கூலித் தொழிலாளர்கள்
மருத்துவமனையில் கூலித் தொழிலாளர்கள்

ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்திருக்கும் களம்பூர் காவல்துறையினர், ஜூஸ் கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism