Published:Updated:

திருச்சி:`சொத்துக்காக கரன்ட் ஷாக் கொடுத்து மகன் கொல்லப் பார்க்கிறான்!’- கலெக்டரிடம் தாய் கண்ணீர்

சொத்துக்காக மகனே கொல்ல வருகிறானே... கண்ணீர் வடிக்கும் தாய்
சொத்துக்காக மகனே கொல்ல வருகிறானே... கண்ணீர் வடிக்கும் தாய்

`நான் உயிரோடு இருந்தால் இந்தச் சொத்துகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, என்னை வீட்டுக்குள் அடைத்துவைத்து கரன்ட் ஷாக் கொடுத்தான்.’

`சொத்துக்காக கரண்ட் ஷாக் கொடுத்து என் மகனே என்னைக் கொல்லப்பார்க்கிறான். என் மகனிடமிருக்கும் என் சொத்துகளை மீட்டுக்கொடுங்கள்’ என்று கண்ணீருடன் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு தாய் மனு கொடுத்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த  லட்சுமி அம்மாள்.
ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த லட்சுமி அம்மாள்.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகேயுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் வசிப்பவர் லட்சுமி அம்மாள். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவருடைய கணவர் கோபால், 1995-ம் ஆண்டு முதல் ஹாலோ பிளாக் செய்யும் சிறு தொழில் ஒன்றை நடத்திவந்தார். 2010-ம் ஆண்டு அவர் இறந்துவிட, அந்தத் தொழிலை அவருக்குப் பிறகு அவரது மகன் ஜோதிமணியும் லட்சுமியும் நடத்திவந்தனர்.

சென்னை: இறப்பதற்கு முன் போன் செய்தாள்! - மகனைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த தாய்

சிறிது காலத்திலேயே தாய் லட்சுமியை மகன் ஜோதிமணி வீட்டைவிட்டு அடித்து வெளியே விரட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவருடைய சொத்துகளை அபகரித்ததாகவும் கூறி லட்சுமி, தனது மகன் ஜோதிமணிமீது காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். ஆனால், காவல் நிலையத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கண்ணீர்மல்க லட்சுமி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தன்னுடைய சொத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும், தன்னை துன்புறுத்தியதற்காக மகன் ஜோதிமணிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை மனு அளித்திருக்கிறார்.

கண்ணீர் வடித்த தாய்
கண்ணீர் வடித்த தாய்

புகாரளித்த வந்த லட்சுமி அம்மாவிடம் பேசினோம். ``என் கணவர் இறந்த பிறகு நான் இருக்கக் கூடாது என்று நினைக்கிறான் என் மகன் ஜோதிமணி. எங்களுக்குக் கொஞ்சமாக சொத்து இருக்கிறது. அதை என் மகளுக்குக் கொடுத்துவிடக் கூடாது என்று என் மகனும், அவன் மனைவியும் திட்டம்போட்டுப் பல சதிவேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நான் உயிரோடு இருந்தால் இந்தச் சொத்துகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக என்னை வீட்டுக்குள் அடைத்துவைத்து கரன்ட் ஷாக் கொடுத்தான். இங்கே இருந்தால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கட்டின சேலையுடன் கரூரில் இருக்கும் என் மகள் வீட்டுக்குப் போய்விட்டேன். இப்போது அங்கேதான் இருக்கிறேன்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு

எனது மகன் சொத்துகள் அனைத்தையும் என்னிடமிருந்து அபகரித்தது மட்டுமல்லாமல், என்னைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறான். எனது மகனிடமிருந்து எனது சொத்துகளை மீட்டுத் தரும்படி ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர்களிடம் சொல்லிவிட்டேன். நடவடிக்கை இல்லை. அதைத் தொடர்ந்து, காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தேன். எந்தப் புண்ணியமும் இல்லை. தற்போது ஆட்சியரிடம் புகார் கொடுக்க வந்திருக்கிறேன்” என்றார் பரிதாபமாக.

அடுத்த கட்டுரைக்கு