குடும்ப உறவினர்களால் கைவிடப்படும் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சாலையோரங்களில் அநாதரவாக சுற்றி திரிவதை அன்றாடம் காண்கிறோம். மனிதாபிமானம் உள்ள சிலர், அதுபோன்ற நபர்களை மீட்டு மறுவாழ்வு அளித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிழற்குடையில் தங்கி யாசகம் பெற்று வருகிறார் 70 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி காலை வேளையில் மழை கொட்டிக்கொண்டிருந்தபோது, மழையில் நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்றை, அந்த மூதாட்டி தூக்கி வந்து, தனது மடியில் படுக்கவைத்து சாப்பாடு கொடுத்து, அரவணைத்துப் பார்த்துக் கொண்டார்.

இதனை அந்த வழியாக சென்ற நாம் வீடியோ எடுத்து 'அவள் விகடன்' ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டோம். அதனைப் பார்த்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 'புதிய நமது இல்லம்' என்ற அறக்கட்டளையினர், பாட்டியின் நிலையை தாங்கள் அறிய காரணமான அவள் விகடன் வீடியோவுக்கு நன்றி கூறி, ராமநாதபுரத்திற்கு நேரடியாக வந்து, மூதாட்டியை புதுக்கோட்டையில் உள்ள தங்ககளது அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்று மறுவாழ்வு அளித்துள்ளனர்.
சிலருக்குத்தான் மனசு இருக்கு, உலகம் அதில் நிலைச்சு இருக்கு!