Published:Updated:

வேட்பாளர்களாகக் களமிறங்கிய குட்டீஸ் - கோவை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தேர்தல்!

கோவை நல்லாயன் பள்ளித் தேர்தல்

கோவை நல்லாயன் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடந்தது.

வேட்பாளர்களாகக் களமிறங்கிய குட்டீஸ் - கோவை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தேர்தல்!

கோவை நல்லாயன் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடந்தது.

Published:Updated:
கோவை நல்லாயன் பள்ளித் தேர்தல்

கோவை கோட்டைமேடு பகுதியில் நல்லாயன் தொடக்கப்பள்ளி உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பயன்படும் வகையில் அவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்க அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி மாணவர் தலைவர், துணைத் தலைவர், உணவுத் தலைவர், விளையாட்டுத் தலைவர், சுற்றுச்சூழல் தலைவர் என்று பல்வேறு பிரிவுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மூன்று மாணவர்கள் போட்டியிட்டனர்.

கோவை நல்லாயன் தொடக்கப்பள்ளி
கோவை நல்லாயன் தொடக்கப்பள்ளி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதைப் போலவே, இந்தத் தேர்தலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வேட்புமனுத் தாக்கல், பிரசாரம் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பூத் சிலிப் வழங்கி, கையில் மை வைத்து, கணினி மூலம் வாக்களித்தனர்.

கோவை நல்லாயன் பள்ளி தேர்தல்
கோவை நல்லாயன் பள்ளி தேர்தல்

தேர்தலில் நின்ற மாணவர்களுக்கு பேனா, புத்தகம், பென்சில், கரும்பலகை, பந்து, மரம், கிரிக்கெட் மட்டை, பழம் உள்ளிட்டவை சின்னங்களாக ஒதுக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகையில், "பள்ளி மாணவர்கள் தேர்தல் முறைகளைப் பற்றி, சிறுவயதிலேயே அறிந்து கொள்வதற்காக தேர்தல் நடத்தப்படுகிறது. கல்வி மட்டுமல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

கோவை நல்லாயன் பள்ளி தேர்தல்
கோவை நல்லாயன் பள்ளி தேர்தல்

அந்த வகையில் இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு 11-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்" என்றனர்.