Published:Updated:

இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்... அச்சத்தில் மக்கள் - நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?!

இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்

மூலனூரின் முக்கிய பகுதிகளில் மின் கம்பங்கள் பழுதடைந்து காணப்படுவதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.

இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்... அச்சத்தில் மக்கள் - நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?!

மூலனூரின் முக்கிய பகுதிகளில் மின் கம்பங்கள் பழுதடைந்து காணப்படுவதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.

Published:Updated:
இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்துக்குட்பட்ட மூலனூரில் மின் கம்பங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட மின் கம்பங்கள், தற்போது முற்றிலுமாக சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் இருக்கின்றன. குறிப்பாக மூலனூரிலிருந்து வெள்ளகோவில் செல்லும் முக்கிய சாலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு, கார் ஒன்று மின் கம்பத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில், சேதமடைந்த அந்த மின் கம்பம் தற்போது வரை சீரமைக்கப்படாமல் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சேதமடைந்த மின்கம்பங்கள்
சேதமடைந்த மின்கம்பங்கள்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், ``அந்த விபத்து நடந்து 6 மாசத்துக்கு மேலாகுது. ஆனா, அப்ப சேதமடைஞ்ச மின் கம்பம் இப்ப வரைக்கும் சரி செய்யப்படல. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிங்க கிட்ட பலமுறை முறையிட்டுட்டோம். ஆனா, எந்த நடவடிக்கையும் இல்ல. ரொம்ப ஆபத்தான நிலையில அந்த மின் கம்பம் இருக்குறதால, அந்தப் பக்கம் போகவே ரொம்ப பயமா இருக்கு. எப்ப வேணும்னாலும் அந்த மின் கம்பம் கீழ விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம்.

அந்த மின் கம்பத்துக்கு பக்கத்துல சாக்கடைக் கழிவு நீர் தேங்கி நிக்குறதால, கம்பம் அதுல ஊறி பலவீனமாகிக் கிடக்கு. அதனால, அதிகாரிங்க உடனடியாக இந்த மின் கம்பத்தையும், சிதிலமடைந்து காணப்படும் மத்த மின்கம்பங்களையும் மாற்றி நடவடிக்கை எடுக்கணும்" என்றனர் ஆதங்கமாக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மின் கம்பங்கள்
மின் கம்பங்கள்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூலனூரின் முக்கிய பகுதிகளில் மின் கம்பங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. இந்த மின் கம்பங்களை மாற்றுவதற்காகக் கடந்தாண்டு புது மின் கம்பங்கள் மூலனூரில் இறக்கி வைக்கப்பட்டன. ஆனால், தற்போது வரை அவை மாற்றப்படாமல் பயனற்றுக் கிடக்கின்றன.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ``எத்தனையோ முறை இந்த சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுங்கள் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால், அவர்கள் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். பொதுவாக ஊராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இது மாதிரியான விஷயங்களை அதிகாரிகள் அடையாளம்கண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்பதால், நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் இந்த மின் கம்பங்கள் கவனிக்கப்பட்டு மாற்றப்படும் என்று நினைத்தோம். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை, தற்போது தேர்தல் நடந்து முடிந்த பிறகும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மின்வாரியத்தினரின் அலட்சியத்தால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்" என்றனர்.

இது தொடர்பாக மூலனூர் மின்வாரிய உதவி மின்பொறியாளரிடம் கேட்டபோது, ``உடனடியாக மின் கம்பங்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கிறோம்" என்றார் சுருக்கமாக.

மாற்றப்படுமா மின்கம்பங்கள்... துடைக்கப்படுமா மக்கள் அச்சம்? பொறுத்திருந்து பாப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism