Published:Updated:

நீலகிரி: யானை - மனித எதிர்கொள்ளல்... அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்; சடலத்துடன் போராடிய மக்கள்!

மக்கள் போராட்டம்

``எங்களால் வீட்டைவிட்டே வெளியில் வர முடியவில்லை. எப்போ யாரை யானை தாக்குமோ என்ற பயத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.”

நீலகிரி: யானை - மனித எதிர்கொள்ளல்... அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்; சடலத்துடன் போராடிய மக்கள்!

``எங்களால் வீட்டைவிட்டே வெளியில் வர முடியவில்லை. எப்போ யாரை யானை தாக்குமோ என்ற பயத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.”

Published:Updated:
மக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம், கூடலூரில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. ஓவேலி பகுதியில் சிறிய டீக்கடை நடத்திவந்த நபர் ஒருவர் கடந்த மாதம், யானை - மனித எதிர்கொள்ளலால் பரிதாபமாக உயிரிழந்தார். அன்றைய தினம் மாலையே பெண் ஒருவரும் யானை - மனித எதிர்கொள்ளலால் உயிரிழந்தார். இதனால் மக்கள் வனத்துறைக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர் .

சடலத்துடன் போராடிய மக்கள்
சடலத்துடன் போராடிய மக்கள்

`மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும்’ என வனத்துறை உறுதி அளித்ததைத் தொடர்ந்து அமைதியடைந்தனர். இந்த நிலையில், ஓவேலி செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீநாதனை நேற்று காபி தோட்டத்துக்குள் யானை தாக்கியது. ஸ்ரீநாதனின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் யானையை விரட்டினர். அருகில் சென்று பார்த்தபோது ஸ்ரீநாதன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் ஆவேசமடைந்த மக்கள், ஸ்ரீநாதனின் உடலைக் கைப்பற்றி கூடலூர் நகர் வரை ஊர்வலமாகச் சென்று சடலத்துடன் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். `மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து எங்கள் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே போராட்டதைக் கைவிடுவோம்’ என ஆயிரக்கணக்கானோர் திரண்டு இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அது கர்நாடக, கேரள எல்லைப் பகுதி என்பதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

சடலத்துடன் போராடிய மக்கள்
சடலத்துடன் போராடிய மக்கள்

இரவு நேரில் சென்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், ``மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யானை தாக்கி உயிரிழந்த ஸ்ரீநாதன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும். உரிய நிவாரணம் கொடுக்கப்படும். யானைத் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் " என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

யானைத் தாக்குதல் குறித்து ஓவேலி மக்கள், "எங்களால் வீட்டைவிட்டே வெளியில் வர முடியவில்லை. எப்போ, யாரை யானை தாக்குமோ என்ற பயத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறோம். இதற்குச் சரியான தீர்வை அரசுதான் எடுக்க வேண்டும்" என்றனர்.