Published:Updated:

பள்ளத்தில் விழுந்து விபத்து; பலனளிக்காத சிகிச்சை; பரிதாபமாக உயிரிழந்த குட்டி யானை!

கோவை தடாகம் அருகே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த குட்டி யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே யானை உயிரிழந்ததற்கான முழு காரணம் தெரியவரும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தடாகம் காப்புக்காடு சி.ஆர்.பி.எஃப் வளாகத்தில் ஓர் குட்டி யானை, எதிர்பாராத விதமாக சேற்றில் வழுக்கி, பள்ளத்தில் விழுந்துவிட்டது.

குட்டி யானை
குட்டி யானை
பிரமாண்ட தந்தத்துக்காக வேட்டையாடப்பட்டதா யானை? குற்றவாளியை நெருங்கும் வனத்துறை!

சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், பொக்லைன் உதவியுடன் பள்ளத்தை சீர் செய்து அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். அதன் பலனாக யானை எழுந்து வனத்துக்குள் சென்றது.

ஆனால், இரண்டு நாள்களுக்குள் அந்த யானை வனத்தை விட்டு வெளியே வந்து ஓர் பட்டா பூமியில் படுத்துவிட்டது. மீண்டும் சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை மற்றும் மருத்துவர் குழு அந்த யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள்.

குட்டி யானைக்கு சிகிச்சை
குட்டி யானைக்கு சிகிச்சை

முதுமலை புலிகள் காப்பக வனக்கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவக் குழு அந்த யானைக்கு சிகிச்சையளித்து, தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அந்தக் குட்டி யானை இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. உயிரிழந்த குட்டி யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

குட்டி யானை
குட்டி யானை
`தமிழகத்தில் இதுதான் முதல்முறை!' - கூண்டில் அடைக்கப்பட்ட யானை மீண்டும் காட்டில் விடுவிப்பு

பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே யானை உயிரிழந்ததற்கான முழு காரணம் தெரியவரும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு