Published:Updated:

நீலகிரி: தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை... தாயுடன் சேர்த்துவைத்த நெகிழ்ச்சி நிகழ்வு!

யானைக்குட்டி

தாயைப் பிரிந்து தவித்த யானைக்குட்டியைக் கூட்டத்துடன் சேர்த்துவைத்த வனத்துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

நீலகிரி: தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை... தாயுடன் சேர்த்துவைத்த நெகிழ்ச்சி நிகழ்வு!

தாயைப் பிரிந்து தவித்த யானைக்குட்டியைக் கூட்டத்துடன் சேர்த்துவைத்த வனத்துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Published:Updated:
யானைக்குட்டி

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகிலுள்ள கிளன்ராக் தேயிலைத் தோட்டப் பகுதியில், பிறந்து சில நாள்களே ஆன யானைக்குட்டி ஒன்று தனியாகப் படுத்திருப்பதை தோட்டத் தொழிலாளர்கள் சிலர் நேற்று காலை பார்த்துள்ளனர். உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர் யானைக்குட்டியை மீட்டனர்.

யானைக்குட்டி
யானைக்குட்டி

அதற்கு தண்ணீர் போன்றவற்றைக் கொடுத்து நிழலான பகுதியில் வைத்து கவனித்துவந்துள்ளனர். மற்றொரு குழுவினர் தாய் யானை இருக்கும் கூட்டத்தைக் காட்டுக்குள் தேடிச் சென்றுள்ளனர். பல மணி நேரம் போராடி, அருகில் இருந்த ஒரு யானைக் கூட்டத்தைக் கண்டறிந்துள்ளனர்‌. அந்தக் கூட்டத்தில் பாலூட்டும் பருவத்தில் தாய்‌ யானை இருப்பதையும் உறுதி செய்துள்ளனர். பின்னர் யானைக் கூட்டத்துடன் குட்டி யானையைச் சேர்த்துவைத்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள வனத்துறையினர், "யானைக்குட்டி மீட்கப்பட்ட இடத்தின் அருகிலிருந்த யானை கூட்டத்துடன் குட்டியைச் சேர்த்தோம். கூட்டத்தில் இருந்த பெண் யானை ஒன்று குட்டியை அரவணைத்துக்கொண்டது.

கூட்டத்துடன் சேர்க்கப்பட்ட யானை குட்டி
கூட்டத்துடன் சேர்க்கப்பட்ட யானை குட்டி

தொடர்ந்து கண்காணித்துவந்தோம். இரண்டு மூன்று முறை குட்டி அதன் தாயிடம் பால் குடிப்பதை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்" என்றனர்.