Published:Updated:

கோவை: கைகொடுக்காத வனத்துறையின் முயற்சி! - காயத்துடன் சுற்றிய யானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு

யானை
News
யானை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காயத்துடன் சுற்றிவந்த ஆண் யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கால் பகுதியில் காயத்துடன் வலம் வந்துகொண்டிருந்தது தெரியவந்தது. காயம் காரணமாக, அந்த யானை மிகவும் சிரமப்பட்டது. இதனால், அந்த யானைக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, வனத்துறை தலைமை வன உயிரினக் காப்பாளர் உத்தரவுப்படி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டது.

கும்கிகளுடன் வனத்துறை
கும்கிகளுடன் வனத்துறை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்காக, சாடிவயல் முகாமிலிருந்து சுயம்பு மற்றும் வெங்கடேஷ் என்ற இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டன. ஆனால், காயமடைந்த யானை நெல்லித்துறை அடர் வனப்பகுதிக்குச் சென்றுவிட்டது.

சாதகமற்ற நிலப்பரப்பு காரணமாக, யானை சமதளப் பரப்புக்கு வந்த பிறகு மயக்க ஊசி செலுத்த வனத்துறை முடிவெடுத்தது. இதற்காக, இரண்டு கும்கி யானைகள், ஐந்து மருத்துவக்குழுக்கள் தயார்நிலையில் இருந்தன. ஆனால், நேற்று மாலை அந்த ஆண் யானை உயிரிழந்துவிட்டதாக வனத்துறை தெரிவித்தது. இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `நெல்லித்துறை காப்பு காட்டில் இரண்டு நாள்களாக லேசாக மழை பெய்துகொண்டிருக்கிறது.

யானை
யானை

யானை சேற்று பகுதியில் வழுக்கி விழுந்ததால், அதற்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அந்த யானைக்குக் காயம் இருந்ததால், அதனால் எழுந்திருக்க முடியவில்லை என்று யூகிக்கிறோம். தொடர்ந்து முயன்றும் யானையால் எழ முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விழுந்த இடத்திலிருந்து, 15 அடி தூரம் நழுவிச் சென்று யானை இறந்திருக்கிறது. காலில் உள்ள காயம் தவிர, வேறொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் அந்த யானைக்கு தோள்பட்டையில் தந்தத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருக்கின்றன. உயிரிழந்த யானைக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும்’ என்று கூறியுள்ளனர்.

யானை
யானை

இதன் மூலம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் மட்டுமே மே மாதத்திலிருந்து இப்போதுவரை மூன்று யானைகள் உயிரிழந்திருக்கின்றன. கோவை மாவட்டத்தில், நடப்பாண்டில் பலியான யானைகளின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்திருக்கிறது.