Published:Updated:

நீலகிரி: மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆண் யானை... வனத்துறை விசாரணை!

உயிரிழந்த யானை

ஆண் காட்டுயானை ஒன்று நேற்று இரவு உணவு தேடிவந்திருக்கிறது. தோட்டத்தில் இருந்த பாக்கு மரத்தை முறித்து சாப்பிட முயன்றிருக்கிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக...

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள பிதர்காடு பகுதியில் இருக்கும் ஒரு தனியார் தோட்டத்தில் யானை ஒன்று இறந்துகிடப்பதாக இன்று காலை வனத்துறையினருக்குத் தகவல் வந்துள்ளது. உடனடியாக விரைந்த வனத்துறையினர், அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மின்சாரம் தாக்கியதில் ஆண் யானை உயிரிழந்திருப்பதை உறுதிசெய்தனர். இது குறித்து வனத்துறையின் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

மின்கம்பி
மின்கம்பி

இது குறித்து வனத்துறையினர், ``இந்தப் பகுதியில் இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் ஆண் காட்டுயானை ஒன்று நேற்று இரவு உணவு தேடி இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறது. இந்தத் தோட்டத்தில் இருந்த பாக்கு மரத்தை முறித்துச் சாப்பிட முயன்றிருக்கிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக பாக்கு மரம் அருகில் இருந்த மின்கம்பியில் உரசியிருக்கிறது. இதனால் மின்கம்பி யானையின் உடலில் பட்டு மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. தோட்ட உரிமையாளரிடம்‌ விசாரணை மேற்கொண்டுவருகிறோம். உடல் கூறாய்வு முடிவுகளுக்குப் பிறகு மற்ற விவரங்கள் தெரியவரும்" என்றனர்.