Published:Updated:

தந்தத்தால் குத்தித் தாக்கிய யானை; வளர்த்த பாகன் பலி! - டாப்ஸ்லிப்பில் நடந்தது என்ன?!

பாகன் ஆறுமுகம் யானை அசோக்

கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், அசோக் என்ற யானை தாக்கியதில் அதன் பாகன் ஆறுமுகம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தத்தால் குத்தித் தாக்கிய யானை; வளர்த்த பாகன் பலி! - டாப்ஸ்லிப்பில் நடந்தது என்ன?!

கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், அசோக் என்ற யானை தாக்கியதில் அதன் பாகன் ஆறுமுகம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
பாகன் ஆறுமுகம் யானை அசோக்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கோழிக்கமுத்தி கிராமத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனத்துறை பராமரிப்பிலுள்ள இந்த முகாமில் 27 யானைகள் உள்ளன.

அசோக் யானை
அசோக் யானை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து, அசோக் என்ற ஆண் யானை கோழிக்கமுத்திக்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 12 வயதான அந்த யானைக்கு, ஆறுமுகம் (45) என்பவர் பாகனாகப் பணியாற்றிவந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நேற்று வழக்கம்போல அசோக் யானைக்கு உணவு கொடுத்துவிட்டு, மேய்ச்சலுக்காகக் காட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக யானை, ஆறுமுகத்தைத் தாக்கியது. காயமடைந்த ஆறுமுகத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆறுமுகம்
ஆறுமுகம்

ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதற்கட்டமாக வனத்துறை சார்பில், ஆறுமுகம் குடும்பத்துக்கு ரூ.25,000 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கோழிக்கமுத்தி கிராம மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் விசாரித்தபோது, ``அசோக் யானையும் ஆறுமுகமும் நல்ல உறவுலதான் இருந்தாங்க. வண்டலூர் உயிரியல் பூங்காவுல, அசோக் யானை குழந்தையா இருந்தப்ப பால் கொடுத்து வளர்த்தது ஆறுமுகம்தான். சொந்தக் குழந்தை மாதிரிதான் அசோக்கைப் பார்த்துக்கிட்டாரு.

ஆறுமுகம் அசோக்
ஆறுமுகம் அசோக்

சனிக்கிழமை டாப்ஸிலிப்ல யானை பொங்கல் விழா எல்லாம் முடிச்சுட்டு, எல்லாருமே ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம். அசோக் யானைக்கு ஆறுமுகம் மட்டும்தான் பாகனா இருந்தார். அசிஸ்டென்ட் யாரும் இல்லை.

அதனால முருகன்னு ஒருத்தர அசிஸ்டென்ட்டா சேர்த்தாரு. அவருக்கு யானைகிட்ட டிரெய்னிங் கொடுத்துட்டு இருந்துருக்காங்க. புது ஆளுங்கறதால யானைக்குப் பிடிக்கலை. அந்தக் கோபத்துல முருகனைத் தாக்கப் போயிருக்கு. முருகனைக் காப்பத்தத் போனப்ப, ஆறுமுகத்தைத் தந்தத்தால குத்தித் தாக்கிருச்சு.

ஆறுமுகம் - அசோக்
ஆறுமுகம் - அசோக்

ஆறுமுகத்துக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. என்ன சொல்றது... மனுசங்களே ஒரு நேரம் மாதிரி, ஒரு நேரம் இருக்கறது கிடையாது. எங்க பொழப்பு இப்படிதான்” என்றனர் வேதனையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism