Published:Updated:

``சென்னை தத்தளிக்காமல் இருக்க அரசு இதைச் செய்தாக வேண்டும்!" - நீர்நிலை ஆய்வாளர்

இன்னொரு முறை சென்னை மழை நீரில் மிதக்காமலும் மூழ்காமலும் இருக்க வேண்டுமென்றால், அரசு, தொண்டு நிறுவனங்கள், சென்னை வாழ் மக்கள் அனைவரும் சென்னையை `Flood Proof' செய்ய வேண்டுமென்கிற ஒத்த மனப்பான்மையுடன் ஒன்றிணைய வேண்டும். ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ, ஒரு துறையோ இதற்கு முடிவு கட்ட முடியாது.

2015 - பெருவெள்ளத்துக்குப் பிறகு மழை என்றாலே சென்னை மக்கள் பதற்றமடைகிற நிலையில், இந்த வருடமும் காற்றும் மழையும் வெள்ளமும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. சென்னை அடிக்கடி பெரு வெள்ளத்தைச் சந்திப்பதற்கான காரணமென்ன என்று `கேர் ஆஃப் எர்த்' அமைப்பைச் சேர்ந்தவரும், நீர் நிலை ஆய்வாளருமான சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ வெங்கடேசனிடம் பேசினோம்.

ஜெயஸ்ரீ வெங்கடேசன்
ஜெயஸ்ரீ வெங்கடேசன்

`` 1840-லிருந்து மழை குறித்தான பதிவை ஆராய்ச்சி செய்து வருகிறேன். மழைக்குறித்த மக்களின் பயத்துக்கும், பெருவெள்ள பேரிடர்களுக்கும் பெருகிவரும் குடியிருப்பு பகுதிகளும், மக்கள் அடர்த்தியுமே காரணங்கள் என்று சமூக நல ஆர்வலர்கள் பகிர்ந்து வருகிறார்கள். இவை மட்டுமல்ல, இன்னும் சில காரணங்களையும் நான் இப்போது சொல்ல விரும்புகிறேன்.

2015-ம் ஆண்டின் பெரு வெள்ளத்துக்குப் பிறகு நீர் நிலைகளை மறுசீரமைக்க வேண்டுமென அத்தனை தொண்டு நிறுவனங்களும் களமிறங்கின. சில தொண்டு நிறுவனங்களைத் தவிர மற்றவை தொடர்ச்சியாக இந்தப் பணிகளைச் செய்யவில்லை. இன்னொரு முறை சென்னை மழை நீரில் மிதக்காமலும் மூழ்காமலும் இருக்க வேண்டுமென்றால், அரசு, தொண்டு நிறுவனங்கள், சென்னை வாழ் மக்கள் அனைவரும் சென்னையை `Flood Proof' செய்ய வேண்டுமென்கிற ஒத்த மனப்பான்மையுடன் ஒன்றிணைய வேண்டும்.

சென்னையில் தொடரும் அதி கனமழை! - 1,000 பேருந்துகளின் சேவை ரத்து

ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ, ஒரு துறையோ இந்த சென்னை வெள்ளம் பிரச்னைக்கு முடிவுக் கட்ட முடியாது. சென்னையை Flood Proof செய்ய வேண்டுமென்றால், `ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள்' என்ற பெயரில் குடிசைவாசிகளை அப்பறப்படுத்துவதோ, சென்னையிலிருக்கிற ஆறுகள் முதல் குட்டைகள் வரை ஏதோ கணக்கெடுப்பதோ, பராமரிப்பதோ அல்ல.

சென்னையிலிருக்கிற ஆறுகள் உருவாகும் இடங்களில் ஆரம்பித்து, அது பயணப்படும் வழிகள், கடலில் கலப்பதுவரைக்கும் அவற்றின் பாதையிலிருக்கிற தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும். நீர் நிலைகள் செல்லும் வழிகளுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இதன மூலம் சென்னையில் மழைநீர்த் தேங்குவதை தடுக்க முடியும்.

சாலையில் மழை நீர்
சாலையில் மழை நீர்
`சமூக சேவையெல்லாம் இல்லை; அது என் கடமைதான்!' - இளைஞர் உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

அடுத்தது சென்னை வாழ் மக்களின் மனப்பான்மை. தொடர்ந்து சென்னையில் செட்டிலாகிக்கொண்டே இருக்கிறோம். வாழ்வாதாரத்தைத் தேடி சென்னை நோக்கி வருபவர்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால், நமக்கெல்லாம் சென்னை மீது எந்தப் பற்றும் இல்லை. ஊர்க் கட்டுப்பாட்டாலோ, ஊர்ப்பாசத்தாலோ சொந்த ஊரைப் பார்த்துப் பார்த்து சுத்தமாக வைத்துக்கொள்கிற நாம், வாழ வைக்கிற சென்னைையின் தெருக்களில் குப்பையைக் கொட்டிக்கொண்டிருக்கிறோம்.

நம் பாரம்பரியத்தில் ஆடிப்பெருக்கு போன்ற நீர்நிலைகள் சார்ந்த கொண்டாட்டங்கள் இருக்கின்றன. ஆனால், சென்னையிலோ குப்பைகளை நீர் நிலைகளில் கொட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த வருட மழையையாவது படிப்பினையாக எடுத்துக்கொண்டு சென்னையை நேசிக்க ஆரம்பிப்போம். சுத்தமாக பராமரிக்க ஆரம்பிப்போம். முக்கியமாக நீர்நிலைகளின் பாதைகளை ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்துவோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு