Published:Updated:

`மறுபடியும் கபடி விளையாடணும் சார்!' - ஈரோடு கலெக்டரிடம் கலங்கிய கோமாவிலிருந்து மீண்ட இளம்பெண்

அந்த ஒரு விபத்து என்னோட ஆசை, கனவு எல்லாத்தையும் நொறுக்கிடுச்சு. எல்லாத்தையும் மீறி நான் சாதிப்பேன்கிற நம்பிக்கை எனக்குள்ள வந்துருக்கு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் காட்டூர் வீதியைச் சேர்ந்த செல்வன் - அன்னக்கொடி தம்பதியரின் மகள் சந்தியா (22). சந்தியாவுக்கு, நரேந்திரன் என்றொரு சகோதரர் இருக்கிறார். கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்து வந்த பெற்றோர்கள், எப்படியாவது பிள்ளைகளை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்கிவிட வேண்டும் என ஆசைப்பட்டனர். பெற்றோர்களின் விருப்பப்படி நன்கு படித்த சந்தியா 10-ம் வகுப்பில் 305 மதிப்பெண்ணும் 12-ம் வகுப்பில் 946 மதிப்பெண்ணும் பெற்றிருக்கிறார். படிப்பில் திறமையான சந்தியா, கபடி விளையாட்டிலும் மாவட்ட, மாநில அளவில் பல பரிசுகளை வென்றிருக்கிறார். மேற்படிப்பு படித்து போலீஸ் அதிகாரி ஆக வேண்டுமென்பதுதான் அவரின் கனவு. அந்தக் கனவினை ஒரு விபத்து சிதைத்துப் போட்டுவிட்டது.

2016-ம் ஆண்டு, 12-ம் வகுப்பை முடித்த சந்தியா மேல் படிப்புக்காகக் காத்திருந்த நேரம். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது எதிரே வந்த டெம்போ வேன் ஒன்று சந்தியாவின் மீது கடுமையாக மோதி, தூக்கி வீசியிருக்கிறது. பலத்த ரத்தக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்தியா கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்.

Sandhya, district collector kathiravan
Sandhya, district collector kathiravan

சந்தியாவை ஈரோடு, கோவை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் வைத்து அவருடைய பெற்றோர்கள் சிகிச்சையளித்தனர். தொடர்ச்சியான சிகிச்சையின் பயனாக இரண்டரை வருடங்களாக கோமாவில் இருந்த சந்தியாவுக்கு சுயநினைவு திரும்பியிருக்கிறது. ஆனால், அவரால் தனியாக நடக்கவோ, எந்த வேலையையும் செய்யவோ முடியாது. கொஞ்சம் சிரமத்தோடுதான் பேசவே முடியும். இந்நிலையில், நேற்று பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார் சந்தியா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலெக்டரிடம் முழு விவரத்தையும் சந்தியாவின் பெற்றோர் எடுத்துச் சொல்ல, ‘ நான் நல்லா கபடி விளையாடுவேன் சார். படிப்புலயும் நல்ல மார்க் எடுத்திருக்கேன். எனக்கு நல்லா படிச்சு போலீஸ் ஆகணும்னு ஆசை. என் உடல்நிலை தேறி நான் நல்லா வந்துடுவேன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு. என்னால என் அம்மா, அப்பா ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு நீங்க கொஞ்சம் உதவி செய்யுங்க சார். நான் மேல படிக்கணும், மறுபடியும் கபடி விளையாடணும், நான் போலீஸாகணும்’ என கலெக்டரிடம் கண்கலங்கினார் சந்தியா.

விரைவில் பழைய வேகத்துடன் கபடி விளையாடுவீர்கள் சந்தியா. நம்பிக்கையைக் கைவிட்டுவிடாதீர்கள்
கலெக்டர் கதிரவன்

அவரது ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்த மாவட்ட கலெக்டர் கதிரவன், சந்தியாவின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்யுமாறு உத்தரவிட்டவர், `என்னால் முடிந்த உதவிகளை நிச்சயமாகச் செய்கிறேன். விரைவில் பழைய வேகத்துடன் கபடி விளையாடுவீர்கள் சந்தியா. நம்பிக்கையைக் கைவிட்டுவிடாதீர்கள்' என உற்சாகப்படுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு