Published:Updated:

கல்லா கட்டும் ஐரோப்பிய நாடுகள்... கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்குத் தடை விதிக்கக் கோரிக்கை!

பஞ்சு

ஒருபக்கம் கழிவுப் பஞ்சுக்குத் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இருப்பு குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது!

கல்லா கட்டும் ஐரோப்பிய நாடுகள்... கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்குத் தடை விதிக்கக் கோரிக்கை!

ஒருபக்கம் கழிவுப் பஞ்சுக்குத் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இருப்பு குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது!

Published:Updated:
பஞ்சு

பஞ்சு, நூல் விலை உயர்வால் அதுசார்ந்த மில்கள் உள்ளிட்ட தொழில் துறையினர் பெரும் சவால்களைச் சந்தித்தனர். முக்கியமாக, கழிவுப் பஞ்சு விலை அதிகரித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள ஓப்பன் எண்ட் மில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சு
பஞ்சு

இதுகுறித்து தொழில் துறையினர் கூறுகையில், ``கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பஞ்சு ஒரு கேண்டி ரூ.1,00,000 மேல் விற்கப்பட்டது, பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதால், அது தற்போது ரூ.68,000-ஆகக் குறைந்துள்ளது.

அதை ஒரு பக்கம் வரவேற்றாலும், நூற்பாலைகள் கழிவுப் பஞ்சு விலையைக் குறைக்க முன்வரவில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதன் விலை ஒரு கிலோவுக்கு ரூ.120-ல் இருந்து ரூ.140-ஆக உயர்ந்துள்ளது. ஒருபக்கம் கழிவுப் பஞ்சுக்குத் தேவை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இருப்பு குறைவாக இருப்பதால், விலை உயர்ந்துகொண்டிருக்கிறது.

பஞ்சு
பஞ்சு

ஜவுளி சங்கிலித் தொடரில் ஓப்பன் எண்ட் மில்களின் பணி மிக முக்கியமானது. ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இங்கிருந்துதான் கழிவுப் பஞ்சு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

டயபர் உற்பத்தி செய்வதில் தொடங்கி அந்த நாடுகளின் பணத்தை அச்சிடுவது வரை நம் நாட்டு கழிவுப் பஞ்சைத்தான் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு நம்மிடம் ரூ.100-க்கு பஞ்சை வாங்கிவிட்டு, அதை டயப்பராக ரூ.800-க்கு மீண்டும் இங்கே விற்கின்றனர். இப்படி ஒரு கிலோவில் மட்டுமே ரூ.700 வரை லாபம் பார்க்கிறார்கள்.

பஞ்சு
பஞ்சு

கழிவுப் பஞ்சு இருப்பு குறைவாக இருப்பதால், அது சார்ந்துள்ள எங்களைப் போன்றோர் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே, கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும். நூற்பாலைகளும் விலையைக் குறைக்க முன் வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

நம்மிடம் மூலப்பொருளை வாங்கி, ஒரு பொருளைத் தயாரித்து, கொள்ளை லாபத்தை வெளிநாட்டு கம்பெனிகள் சம்பாதிப்பதைப் பார்த்தாவது இதில் இருக்கும் வாய்ப்பை நாம் உணர வேண்டும். அந்த வேலையை இங்குள்ள நிறுவனங்கள் செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாமே!