Published:Updated:

வட்டிக்குப் பணம்; வலைவீசிய பெண்? - துடிதுடிக்கப் பறிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரரின் உயிர்!

ராணுவ வீரர் கொலை

வேலூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் ஓட ஓட விரட்டி அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வட்டிக்குப் பணம்; வலைவீசிய பெண்? - துடிதுடிக்கப் பறிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரரின் உயிர்!

வேலூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் ஓட ஓட விரட்டி அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ராணுவ வீரர் கொலை

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகிலிருக்கும் சந்தனக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம், வயது 47. இவர் மனைவி ஜெயகுமாரி, மகன் பாரத். முன்னாள் ராணுவவீரரான பூங்காவனம், சிலருக்கு கடன் கொடுத்து ‘வட்டி’ வசூலித்து வந்திருக்கிறார். பணத்தை திரும்பக்கேட்டதில், ஒருத்தரப்பினரோடு தகராறு ஏற்பட்டு ‘பகை’ வளர்ந்திருக்கிறது.

ராணுவ வீரர்
ராணுவ வீரர்

பகை முற்றிய நிலையில், நேற்று மாலை கண்ணமங்கலம் மின்வாரிய அலுவலகம் எதிரே பூங்காவனத்தை 6 பேர் கொண்ட கும்பல், மூங்கில் கம்புகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியிருக்கிறது. இந்தத் தாக்குதலில், நிலை குலைந்து விழுந்த பூங்காவனம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். தகவலறிந்து வந்த வேலூர் தாலுகா போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். பூங்காவனத்தின் கொலையில் மற்றுமொரு தகவலும் உலாவிக்கொண்டிருக்கிறது. வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும்போது, திருமணமான பெண் ஒருவரோடு அவருக்குத் தவறான தொடர்பு ஏற்பட்டதாகவும், பின்னாளில் அந்தப் பெண்ணுடனான உறவைத் துண்டித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணிடம் பூங்காவனம் கொஞ்சம் பணம் கொடுத்து வைத்திருந்ததாகவும், அதனை திரும்பக் கேட்டதில்தான் தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கொலை
கொலை

அந்தப் பெண்ணின் தரப்பைச் சேர்ந்த கும்பல்தான், பூங்காவனத்தை நேற்று மாலை டீக்கடை ஒன்றுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை அந்தக் கும்பல் கொடூரமாகக் கொலைசெய்துவிட்டு தப்பியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்களிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.