Published:Updated:

சென்னையில் அதிகாலை முதல் மழை; 13 மாவட்டங்களுக்குக் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை மழை

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகாலை முதல் மழை; 13 மாவட்டங்களுக்குக் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Published:Updated:
சென்னை மழை

கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. மேலும் அடுத்த மூன்று நாள்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை மழை
சென்னை மழை

இன்று அதிகாலை முதலே சென்னை பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்குச் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் மாநில ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் அதிகாலையிலிருந்தே மழை பெய்யும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பிற்பகலுக்குப் பின் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மழை
சென்னை மழை

நாளை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். சென்னை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை கனமழைக்கு வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.