Published:Updated:

தமிழணங்கு சர்ச்சை.. தமிழ்த்தாய் கறுப்பா, சிவப்பா.. தமிழறிஞர், சிற்பி சொல்வதென்ன?

தமிழணங்கு

தமிழ்த்தாய் என்பது ஓர் உருவகம். அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை இல்லை. அதேபோல தலைவிரி கோலத்தை தவறு என்று சொல்வதும் ஏற்புடையதல்ல. தலைவிரி கோலம்தான் இயற்கையானது. கூந்தலை முடிந்து அலங்கரிப்பது, மொழியின் உருவகமாக வழிபடப்படும் தமிழ்த்தாய்க்கு அவசியம் இல்லை

தமிழணங்கு சர்ச்சை.. தமிழ்த்தாய் கறுப்பா, சிவப்பா.. தமிழறிஞர், சிற்பி சொல்வதென்ன?

தமிழ்த்தாய் என்பது ஓர் உருவகம். அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை இல்லை. அதேபோல தலைவிரி கோலத்தை தவறு என்று சொல்வதும் ஏற்புடையதல்ல. தலைவிரி கோலம்தான் இயற்கையானது. கூந்தலை முடிந்து அலங்கரிப்பது, மொழியின் உருவகமாக வழிபடப்படும் தமிழ்த்தாய்க்கு அவசியம் இல்லை

Published:Updated:
தமிழணங்கு

மூன்று நாள்களுக்கு முன் 'தமிழணங்கு' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த தமிழ்த்தாயின் ஓவியம் பல்வேறான விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த அந்த ஓவியத்தில் தமிழ்த்தாய் கறுப்பு நிறத்தில் தலை விரிகோலமாக உக்கிரத்தோடு இருப்பது போன்றும், காலில் சிலம்பு அணிந்து கையில் 'ழ' என்கிற எழுத்தைத் தாங்கிய வேலோடு இருப்பதாகவும் வரையப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இணைப்பு மொழி இந்திதான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஓவியத்தை பகிர்ந்திருப்பது இந்தித் திணிப்புக்கு எதிரான செயல்பாடு என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். தமிழ்த்தாய் கறுப்பு நிறத்தில் வரையப்பட்டிருப்பதும், தலை விரிகோலமாக வரையப்பட்டிருப்பதும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் 'தமிழணங்கு' ஓவியத்தை எப்படிப் பார்க்கலாம் என துறைசார் நிபுணர்களிடம் கேட்டோம்.

தமிழன்னை
தமிழன்னை
படம்: என்.ஜி.மணிகண்டன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதன்முதலில் தமிழ்த்தாய்க்கென வரையப்பட்ட ஓவியத்துக்கான ஆலோசனைக்குழுவின் தலைவராக இருந்த முனைவர் ஆறு அழகப்பனார், தமிழ்த்தாய் ஓவியம் உருவான விதம் குறித்தும், தமிழணங்கு ஓவியம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

"1981-ம் ஆண்டு உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்ற போது பூம்புகாரில் தமிழ்த்தாய்க்கான ஓவியம் வரைவதற்கான குழு அமைக்கப்பட்டது. தமிழறிஞர்கள், ஆதீனங்கள் இடம்பெற்றிருந்த அக்குழுவுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த நான் தலைமை வகித்தேன். எங்களது குழுவின் ஆலோசனைப்படி இலங்கையைச் சேர்ந்த ஓவியர் பெனட்ரிக் என்பவர் தமிழ்த்தாய் ஓவியத்தை வரைந்தார். தமிழ்த்தாயின் இருக்கையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சின்னங்களான வில், வேங்கை, மீன் ஆகியவை வரையப்பட்டிருக்கும். தமிழர்களின் திணையியல் வாழ்வைக் குறிக்கும்படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு திணைகளைச் சேர்ந்த மலர்களால் ஆன மாலை தமிழ்த்தாய்க்கு சூடப்பட்டிருக்கும்.

தமிழ்த்தாய் ஓவியம்
தமிழ்த்தாய் ஓவியம்

தமிழின் முதல் எழுத்தான 'அ' கையில் எழுதப்பட்டிருக்கும். இப்படியாக தமிழ் மொழியோடும், தமிழ் நிலத்தோடும் தொடர்புபடுத்தி தமிழ்த்தாயை வரைந்தோம். அந்த ஓவியம் பூம்புகாரிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. இன்றைக்கு அந்த ஓவியம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது. தற்போது 'தமிழணங்கு' என வெளியிடப்பட்டிருக்கும் ஓவியத்தில் அணங்கு என்கிற பொருள் கொண்ட தெய்வாம்சமே இல்லை. ழ என்கிற எழுத்தைத் தாண்டி தமிழ் மொழியைக் குறிக்கும் எந்த அம்சமும் இன்றி அலங்கோலமாக இருக்கிறது. தமிழ் அறிந்தவர்களால் தமிழ்த்தாயை இப்படியாகப் பார்க்க முடியாது" என்கிறார் ஆறு அழகப்பனார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழணங்கு ஓவியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் தமிழ்த்தாய் கறுப்பு நிறத்தில் வரையப்படுவதில் எந்தப் பிழையும் இல்லை என்கிறார் ஆகம அறிஞர் மு.பெ.சத்தியவேல் முருகனார்.

சத்தியவேல் முருகனார்
சத்தியவேல் முருகனார்

"தமிழணங்கு என்று கூறி உக்கிர தாண்டவம் ஆடும் ஓவியத்தை வரைந்திருக்கிறார். அணங்கு என்பதற்கான பொருள் என்னவென்று இவர்களுக்குத் தெரிந்துதான் இப்படியாக வரைகிறார்களா? 'அணங்கு கொல் ஆண்மயில் கொல்லோ' என்று திருக்குறளில் கூட குறிப்பிடப்பட்டிருக்கும். அணங்கு என்பதன் பொருள் தெய்வம். முழு முதற்கடவுள் அல்ல... வன தேவதை என்று சொல்வது போல தமிழ் என்கிற மொழியையும் நாம் தெய்வமாக உருவகப்படுத்தி வழிபடுகிறோம். தமிழ்த்தாய் இவ்வளவு உக்கிரத்தோடு இருப்பது போல வரைவதை தமிழை அறிந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழை முறையாகக் கற்றவர்கள் இதனைச் செய்ய மாட்டார்கள்.

மற்றபடி, கறுப்பு நிறத்தில் தமிழ்த்தாயை வரையலாமா என்று கேட்டால் அப்படியாக வரைவதில் எந்தத் தவறும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்த்தாய்க்கென ஆறு அழகப்பனார் தலைமையிலான குழுவினரால் வரையப்பட்ட ஓவியத்தில் தமிழ்த்தாய் சிவப்பு நிறத்தில்தான் இருப்பார். அதற்காக கறுப்பு நிறத்தில் வரையக்கூடாது என்றில்லை. மீனாட்சி அம்மன் கூட கறுப்புதான். கறுப்பு நிறத்தில் வரையக்கூடாது என்று சொல்வது ஏற்புடையதல்ல. ஏனென்றால் அது கறுப்பு என்கிற நிறத்தின் மீதான கீழ்மையான பார்வை கொண்டிருப்பதாகி விடும்" என்கிறார் சத்தியவேல் முருகனார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிற்பங்கள் அத்தனையும் கருங்கல்லால் ஆனவை என்கிறபோது கறுப்பாக வரைவதில் என்ன தவறு என்கிறார் பெருந்தச்சன் கீர்த்தி வர்மன்.

கீர்த்தி வர்மன்
கீர்த்தி வர்மன்

"சிற்பங்கள் செதுக்கும் பெருந்தச்சன் நான். பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கருங்கல்லில்தான் சிலை வடித்து வருகிறோம். அப்படிப் பார்க்கையில் அனைத்து கடவுளும் கறுப்பு நிறத்தில்தான் இருக்கின்றனர். என் முன்னோரை நான் கறுப்பாகத்தான் நினைத்துப் பார்க்கிறேன். என் முன்னோரைப் போல என் மொழியும் என் வாழ்வோடு தொடர்புடையது. என் முன்னோரை எப்படியாக நினைக்கிறேனோ, வழிபடுகிறேனோ அது மாதிரிதான் என் மொழியையும் நினைத்து வழிபடுகிறேன். அப்படியாக தமிழர்களின் நிறம் கறுப்பு எனும்போது தமிழ்த்தாயைக் கறுப்பாக வரைவதில் என்ன தவறு இருக்க முடியும்?

தமிழ்த்தாய் என்பது ஓர் உருவகம். அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற எந்த வரையறையும் இல்லை. வட நாட்டில் மார்பிள் கல்லில் சிற்பங்கள் செய்கிறார்கள். நமக்கு கருங்கல்தான் கிடைக்கிறது என்பதால் நம் சிந்தனையிலேயே கறுப்பு கலந்திருக்கிறது. அதே போல தலைவிரி கோலத்தை தவறு என்று சொல்வதும் ஏற்புடையதல்ல. தலைவிரி கோலம்தான் இயற்கையானது. கூந்தலை முடிந்து அலங்கரிப்பது மொழியின் உருவகமாக வழிபடப்படும் தமிழ்த்தாய்க்கு அவசியம் இல்லை" என்கிறார் கீர்த்தி வர்மன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism