Election bannerElection banner
Published:Updated:

ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்-மில் இருந்து வந்த கள்ள நோட்டுகள்!- மிரண்ட மின்வாரிய ஊழியர்

2000 ரூபாய் கள்ள நோட்டு
2000 ரூபாய் கள்ள நோட்டு ( vikatan )

நாமக்கல்லில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்-மில் இருந்து வரிசையாக இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், சேந்தமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.

மாதிரி படம்
மாதிரி படம்

அதில், ஐந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் புகார் அளிக்கச் சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் மூர்த்தியிடம் வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்துவிட்டு மறுநாள் வருமாறு கூறிவிட்டு, வங்கியின் வாசலைப் பூட்டியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, ஒட்டப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை வாசலில் வைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மூர்த்தியை சமாதானப்படுத்தி வங்கிக்குள் அழைத்துச்சென்றனர்.

எஸ்பிஐ ஏடிஎம்
எஸ்பிஐ ஏடிஎம்

மூர்த்தியிடம் புகார் மனு பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள், கள்ள நோட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் எடுத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பித் தருவதாகவும் கூறினர். சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்திவிட்டு, மூர்த்திக்கு 10,000 ரூபாய் கள்ள நோட்டுக்குப் பதிலாக, ஒரிஜினல் ரூபாய் வழங்கப்பட்டது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு