Published:Updated:

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 தமிழக மீனவர்கள்! - உடனடியாக மீட்க வலியுறுத்தும் பெண்கள்

மீனவர்கள்

காரைக்காலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்திருப்பதால், அவர்களை மீட்டுத்தரக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ கிராம பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சிவகுமார், தினேஷ்குமார், அசோக், அழகர், சதீஷ், மற்றும் நாகை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட 14 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கோடியகரைத் தென்கிழக்கு கடல் அருகே நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களை தற்போது இலங்கை காங்கேசன்துறை கடல்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை செய்து, பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்திருக்கின்றனர்.

14 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதையும், விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர்  அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

இது பற்றி கோட்டுச்சேரிமேடு மீனவர்களிடம் பேசினோம். ``மத்திய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்டுத்தரவேண்டும். இந்தச் சம்பவம் காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை சிறையில் வாடும் நிலையில், மீண்டும் காரைக்கால்  மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது.

மீனவர்கள்
மீனவர்கள்

தமிழக, புதுச்சேரி மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மௌனமாக இருக்காமல் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும்" என்றனர்.