Published:Updated:

`இறந்தவருக்கு மாலைக்கு பதில் அவர் குடும்பத்துக்கு ரூ. 200!’ - ஒரு கிராமத்தின் முடிவு; காரணம்..?

கிராமத்தினர்
News
கிராமத்தினர்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில், ``ஊரில் யார் இறந்து போனாலும் ஒரேஒரு மாலைதான் போடவேண்டும்" என ஊரே சேர்ந்து ஒருமித்த முடிவு எடுத்துள்ளனர்.

`இறந்தவருக்கு மாலைக்கு பதில் அவர் குடும்பத்துக்கு ரூ. 200!’ - ஒரு கிராமத்தின் முடிவு; காரணம்..?

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில், ``ஊரில் யார் இறந்து போனாலும் ஒரேஒரு மாலைதான் போடவேண்டும்" என ஊரே சேர்ந்து ஒருமித்த முடிவு எடுத்துள்ளனர்.

Published:Updated:
கிராமத்தினர்
News
கிராமத்தினர்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில், ``ஊரில் யார் இறந்து போனாலும் ஒரே ஒரு மாலைதான் போடவேண்டும்" என ஊரே சேர்ந்து ஒருமித்த முடிவு எடுத்துள்ளனர்.

ஊரில் ஒருவர் இறந்துவிட்டால் சிறிய அளவு மாலைகள் தொடங்கி, பெரிய ஆளுயர மாலைகள் வரை இறந்தவர்களுக்கு போடப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி ஊராட்சியில் சாந்தான்வெளி, அகரம் இரண்டு சிறு குடியிருப்பு பகுதியிலுள்ள மக்கள் அனைவரும், இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது மற்றும் மாலை போடுவது தொடர்பாக, சமீபத்தில் கூட்டம் கூட்டி கலந்துரையாடினர்.

கிராமத்தினர்
கிராமத்தினர்

கூட்டத்தில், பொதுவாக இல்லங்களில் மரணம் ஏற்படும்போது கிராமத்தினர் சார்பில் ஒரு மாலை மட்டும் அணிவித்து இறுதி சடங்குகள் செய்வது என்றும், இறப்பு செய்தி அறிவிக்கும்போதே மாலையைத் தவிர்க்கவும் என அறிவிக்கப்படும் என்றும், அவர்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம்தான் தற்போது அதிகம் கவனம் பெற்று வருகிறது. 

`பொதுவாக, இறந்தவருக்கு நிறைய மாலைகள் போடும்போது அவரது உடலின் மீது மாலைகள் அப்படியே குவிந்து கிடக்கும். நூற்றுக்கணக்கான அந்த மாலைகளை ஆள்வைத்து வெட்டி நறுக்கி, சுடுகாட்டுக்குச் செல்லும் வழியெங்கும் தூவிச் செல்கின்றனர். அப்போது சில நேரங்களில் மாலைகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விபத்துக்குள்ளாகின்றனர். பலர் காயம்படுகின்றனர். இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்கின்றனர் ஊர் மக்கள்.

கிராமத்தினர்
கிராமத்தினர்

`எனவே, ஊரின் சார்பில் இறந்தவருக்கு ஒரு மாலை மட்டுமே அணிவிக்க வேண்டும். டிரம்செட் வைக்கக் கூடாது. மேலும் மாலைக்கு பதில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 200 வழங்கிடவும், அந்த தொகையில் இறுதிச் சடங்கை நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளோம். இதனால் இறுதிச் சடங்கிற்கு அதிக தொகை செலவு செய்வது தவிர்க்கப்படும். வாழும்போது ஏழை, பணக்காரன் வேறுபாட்டுடன் வாழும் உலகில், இறப்பில் அனைவரும் சமம் என்று இறந்தவர்களை வழியனுப்பி வைக்கிறோம்’ என்கின்றனர் கிராம மக்கள். இவர்கள் எடுத்திருக்கும் முடிவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.