Published:Updated:

ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த கோவை நபர்; ஆணுறையைக் கொடுத்த உணவு டெலிவரி நிறுவனம்!

உணவு டெலிவரி நிறுவனம்

கோவை மாவட்டத்தில் ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு காண்டம் டெலிவரி செய்த சர்ச்சையில் சிக்கியுள்ளது பிரபல உணவு டெலிவரி நிறுவனம் ஒன்று.

ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த கோவை நபர்; ஆணுறையைக் கொடுத்த உணவு டெலிவரி நிறுவனம்!

கோவை மாவட்டத்தில் ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு காண்டம் டெலிவரி செய்த சர்ச்சையில் சிக்கியுள்ளது பிரபல உணவு டெலிவரி நிறுவனம் ஒன்று.

Published:Updated:
உணவு டெலிவரி நிறுவனம்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், தன் குழந்தைகளுக்காக ஸ்விக்கியில் ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்திருக்கிறார். குழந்தைகள் ஆவலுடன் காத்திருந்த சிறிது நேரத்தில், பெரியசாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கோவை
கோவை

காரணம், தான் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக, அவருக்கு காண்டம் பாக்கெட்டுகளை அந்த உணவு நிறுவனம் டெலிவரி செய்திருக்கிறது. இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், பதிவு செய்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக பெரியசாமியிடம் கேட்டபோது, ``நேற்று இரவு குழந்தைகள் கேட்டனர் என்பதற்காக ஸ்விக்கியில் 2 ஐஸ்க்ரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்தேன். டெலிவரி பாய் சிறிய பாக்கெட்டில் கொடுத்தார். அப்போதே சந்தேகத்துடன் திறந்து பார்த்தபோது, காண்டம் இடம்பெற்றிருந்தது.

ஆர்டர் செய்த பில்
ஆர்டர் செய்த பில்

‘டெலிவரி தவறாக கொடுத்திருக்கிறீர்கள், இதை ரிட்டர்ன் எடுத்துக்கொண்டு, என்னுடைய ஆர்டரை எனக்கு டெலிவரி செய்யுங்கள்’ எனக் கூறினேன். ஆனால் அந்த டெலிவரி பாய், ‘இதை ரிட்டர்ன் எடுக்கும் அதிகாரம் எனக்கில்லை, வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளியுங்கள்’ என கூறிச் சென்றுவிட்டார்.

வாடிக்கையாளர் சேவை மையத்திடம் பேசியபோது, `டெலிவரி தவறாக வந்திருக்கும். நாங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறோம்’ என்றனர். ‘நான் ஆர்டர் செய்த பொருள்தான் வேண்டும்’ எனக் கேட்டேன். அதற்கு, ‘அப்படி செய்ய முடியாது’ எனச் சொல்லி பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டனர். அதனால்தான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன்.

உணவு டெலிவரி
உணவு டெலிவரி

என்ன ஆர்டர் செய்தோமோ அதைத்தானே கொடுக்க வேண்டும். இவர்களாக ஒரு பொருளை கொடுப்பதும், கேட்டால் பணத்தைத் திருப்பியளிப்பதும் என்ன மாதிரியான சேவை. இதனால், நேற்று என் மகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் மட்டுமே மிஞ்சியது” என்றார்.