Published:Updated:

`மாட்டுப் பண்ணைக்குக் கடன் தரமறுத்த வங்கி!'- தஞ்சை ஆட்சியர் முன் தீக்குளிக்க முயன்ற விவசாயி

தீக்குளிக்க முயன்ற விவசாயி
தீக்குளிக்க முயன்ற விவசாயி ( ம.அரவிந்த் )

கலெக்டர் அலுவலகத்திற்குக் குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வருபவர்களைப் பாதுகாப்பிற்கு நிற்கும் போலீஸார் சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். ஆனால், எப்படியோ பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார் விவேகானந்தன்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மாட்டுப் பண்ணை வைப்பதற்காக, வங்கியில் கடன் உதவி கேட்டுள்ளார். ஆனால் வங்கி நிர்வாகம் தர மறுத்த நிலையில், தஞ்சாவூரில் கலெக்டர் முன்பே தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயன்ற விவசாயி
தீக்குளிக்க முயன்ற விவசாயி

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மக்கள் குறைத்தீர் நாள் கூட்டம், கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மனு அளிக்க வந்த, விவசாயி ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டுப் பின்னர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். இதைப் பார்த்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தனது உடல் எரிவதாக அழுது கொண்டிருந்த அந்த விவசாயியைப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் உடனே மீட்டு வெளியே அழைத்துச் சென்றதுடன் வளாகத்தில் உள்ள பைப்பில் குளிக்க வைத்தனர்.

இதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி விவேகானந்தன் என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாரிடம் பேசினோம், ``விவேகானந்தன் மாட்டுப் பண்ணை வைப்பதற்காக பட்டுக்கோட்டையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.10 லட்சம் கடன் உதவி கேட்டிருக்கிறார்.

தீக்குளிக்க முயன்ற விவசாயி
தீக்குளிக்க முயன்ற விவசாயி

அதற்கு வங்கித் தரப்பில் மாட்டுப் பண்ணை வைப்பதற்கெல்லாம் ரூ.10 லட்சம் தர முடியாது என மறுத்திருக்கின்றனர். இதனால் விரக்தியடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். அப்படியாவது தனக்குக் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்படிச் செய்ததாகத் தெரிவித்தார்" என்றனர்.

கலெக்டர் அலுவலகத்திற்குக் குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வருபவர்களைப் பாதுகாப்பிற்கு நிற்கும் போலீஸார் சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். ஆனால், எப்படியோ பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார் விவேகானந்தன்.

தீக்குளிக்க முயன்ற விவசாயி
தீக்குளிக்க முயன்ற விவசாயி

இதையடுத்து கலெக்டர் பாதுகாப்பிற்கு நின்ற போலீஸாரிடம் நீங்கள் சோதனை செய்தும் அவர் எப்படி பெட்ரோலுடன் கூட்ட அரங்கிற்கு வந்தார் எனக் கடிந்து கொண்டார். இதனால் மனுக்கள் வாங்கி முடியும் வரை கலெக்டர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு