Published:Updated:

வேலூர்: `ஒருநாள் வியாபாரமே 1.5 கோடி ரூபாய்!' - மாட்டுச் சந்தை மூடலால் கலங்கும் விவசாயிகள்

மாட்டின் பல்லைப் பார்த்து ஆரோக்கியத்தைக் கணக்கிடும் விவசாயி

4 மாதங்களாக முடங்கியிருக்கும் கால்நடைச் சந்தைகளால், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலூர்: `ஒருநாள் வியாபாரமே 1.5 கோடி ரூபாய்!' - மாட்டுச் சந்தை மூடலால் கலங்கும் விவசாயிகள்

4 மாதங்களாக முடங்கியிருக்கும் கால்நடைச் சந்தைகளால், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
மாட்டின் பல்லைப் பார்த்து ஆரோக்கியத்தைக் கணக்கிடும் விவசாயி

வேலூர் பொய்கை மாட்டுச் சந்தை, வட தமிழக விவசாயிகளிடம் மிகப் பிரபலம். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் சந்தை களைகட்டும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல்வேறு இன கறவை மாடுகளும் காளைகளும் விற்பனைக்காக இங்கு கொண்டுவரப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் 1.5 கோடி ரூபாய்க்கு மாட்டு வியாபாரம் கைமாறுகிறது.

பொய்கை மாட்டுச் சந்தை
பொய்கை மாட்டுச் சந்தை

திங்கள்கிழமை இரவிலேயே, வெளியூர்களில் இருந்து மாடுகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வந்துவிடுவார்கள். வறுமையில் உள்ள சிறு விவசாயிகள் பலர் வண்டி வாடகை கொடுக்க முடியாமல், 50 கிலோ மீட்டராக இருந்தாலும் நடந்தே மாடுகளை ஓட்டி வருவார்கள். மாடுகளின் பல்லைப் பிடித்தும், கன்று ஈன்றதை வைத்தும், நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் பால் கறக்கும் என்பதைக் கேட்டும், மடியைப் பார்த்தும் தரகர்கள் மூலம் விலையை நிர்ணயித்து விவசாயிகள் மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செவ்வாய்க்கிழமை மதியத்துக்குள் அனைத்து மாடுகளும் விற்பனையாகிவிடும். இடை இடையே மற்ற வியாபாரிகளும், சிறு விவசாயிகளும் கடை விரித்து தங்களது பொருள்களை விற்பனை செய்துகொள்வார்கள். பெரும் தொகை வருவாயாகக் கிடைப்பதால், ஆண்டுதோறும் பொய்கைச் சந்தையை ஏலம் எடுப்பதில் கடும் நெருக்கடி நிலவுகிறது. இந்த ஆண்டுக்கான வரி வசூல் ஏலம் கடந்த மார்ச் மாதம் விறுவிறுப்பாக நடைபெற்றது. பா.ம.க பிரமுகர் லோகநாதன் என்பவர் ரூ.94 லட்சத்துக்குச் சந்தையை ஏலம் எடுத்தார்.

துணியால் கைகளை மறைத்து விரல்களால் விலை பேசுகிறார்கள்
துணியால் கைகளை மறைத்து விரல்களால் விலை பேசுகிறார்கள்

இந்த நிலையில் கொரோனா பொது முடக்கம் காரணமாக பொய்கைச் சந்தை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கால்நடை சந்தைகளும் கடந்த 4 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. இதனால், கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை சந்தைகளை சார்ந்திருந்த ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநேரத்தில், பால் கொள்முதலையும் பெருமளவு குறைத்திருக்கிறது ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்கள். நாள்தோறும் பால் திருப்பி அனுப்பப்படும் சூழலில் விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்போரின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்திருக்கிறது.

எனவே, ``விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கால்நடை சந்தைகளையும் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களை வஞ்சிக்கக் கூடாது. பால் கொள்முதல் விலையைக் குறைக்காமல் சரியானத் தொகையைக் கொடுக்க வேண்டும்’’ என்கிறார்கள் விவசாய சங்க பிரதிநிதிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism