Published:Updated:

KisanRail:`தமிழகத்தில் எப்போது விவசாயி ரயில் சேவை?’ - வலுக்கும் கோரிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விவசாயி ரயிலைத் தொடங்கி வைக்கும் அமைச்சர்கள்
விவசாயி ரயிலைத் தொடங்கி வைக்கும் அமைச்சர்கள்

தமிழ்நாட்டிலும் விவசாயிகள் ரயில் சேவை தொடங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இங்குள்ள விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவிலேயே முதல்முறையாக, விவசாய விளைபொருள்களை மட்டும் ஏற்றிச் செல்லக்கூடிய பிரத்யேக ரயில் சேவை, மகாராஷ்டிராவிலிருந்து பீகாருக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற பிரத்யேக ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என இங்குள்ள விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

தஞ்சை ரயில் நிலையம்
தஞ்சை ரயில் நிலையம்

விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறார்கள். போக்குவரத்துக்கு அதிகளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது. விரைவில் தரம் இழக்ககூடிய காய்கறிகள், பழங்கள், மலர்கள், வெற்றிலை இவை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும்போது, நிறைய இழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில்தான் மத்திய அரசின் பட்ஜெட்டின்போது, விவசாயிகளின் நலன் கருதி, விளைபொருள்களைக் கொண்டு செல்வதற்கான சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்

`ஆட்கள் கிடைக்கலை; பழைய மோட்டார் பாகங்களில் புதிய கருவி!’ - மயிலாடுதுறை விவசாயி அசத்தல்

மத்திய அரசின் அறிவிப்பின்படி, ரயில்வே துறையால் உருவாக்கப்பட்ட கிசான் ரயில் என அழைக்கப்படும் விவசாயி ரயில், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், தேவ்லாலியிலிருந்து பிகார் மாநிலம் தனாபூருக்கு இயக்கப்படுகிறது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் கொடி அசைத்து இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தனர்.

சுகுமாறன்
சுகுமாறன்

காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட விவசாய விளைப்பொருள்கள் தரம் இழக்காமல் பாதுகாப்பதற்காக இந்த ரயிலில், குளிர்பதன வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்படுகிறது. ஒரு டன் விளைபொருள்கள் ஏற்றிச் செல்ல 4,000 ரூபாய் கட்டனம் வசூல் செய்யப்படும் எனவும் ஒரு பெட்டியில் 17 டன் வீதம் விளைப்பொருள்களை கொண்டு செல்ல முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில்தான் உடனடியாக தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ரயில் சேவை தொடங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இங்குள்ள விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணை தலைவர் சுகுமாறன் ``டெல்டா மாவட்டங்களில் இருந்து, வாழைத்தார்கள், வாழையிலை, காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவை வெளி மாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

விவசாயி ரயில்
விவசாயி ரயில்

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஏராளமான பழங்கள், காய்கறிகள், பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு லாரிகளில் எடுத்து செல்லப்படுகின்றன. இதற்கு மாற்றாக, தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான பிரத்யேக ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும். சென்னை-கன்னியாகுமரி வரையிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்னியந்திய மாநிலங்களும் விவசாயி இயக்கப்பட வேண்டும். இதனால் விவசாயிகள் பயன் அடைவதோடு மட்டுமல்லாமல், ரயில்வே துறைக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் கிடைக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு