Published:Updated:

`சட்டப்பூர்வ அங்கீகாரம் வேண்டும்!'- வேளாண் மண்டல விவகாரத்தில் காவிரி விவசாயிகள்

இனிப்பு வழங்கும் டெல்டா மக்கள்
இனிப்பு வழங்கும் டெல்டா மக்கள்

இது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என டெல்டா மக்கள் எச்சரிக்கிறார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். இப்பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காவிரி டெல்டா மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள் என பல தரப்பிலிருந்தும் பாராட்டும், நன்றியும் குவிந்து வருகிறது. அதேசமயம், இந்த அறிவிப்புக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்க, உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள்.

விமலநாதன்
விமலநாதன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் ‘’காவிரி டெல்டா விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக, அவரை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம் இது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. இதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்க, உடனடியாக தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அவசர சட்டம் இயற்றவும் விரைவான ஏற்பாடுகளில் தமிழக அரசு இறங்கி வேண்டும். மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கவும், எதிர்காலத்தில் சட்டத்தில் ஓட்டகளை உருவாக்காமல் தடுக்கவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடம் கலந்தாலோசித்து, அதற்கான வரைவை உருவாக்க வேண்டும். மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவைகளை தமிழக அரசு உடனே திரும்ப வேண்டும்” என தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு