Published:Updated:

`கடந்த ஆண்டு தந்தை, தற்போது மகன்’ - இருவருமே யானை தாக்கி உயிரிழந்த சோகம்!

elephant attack
elephant attack

இவரது தந்தை சுப்பிரமணியும் கடந்த ஆண்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். தந்தை மகன் இருவருமே யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வன விலங்குகள் சுதந்திரமாக வலம் வருகின்றன. குடியிருப்புப் பகுதிகளுக்குத் தண்ணீர் தேடி இரவில் வரும் யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் தற்போது பகலிலேயே உலவுகின்றன.

elephant attack
elephant attack

அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் நடமாடுவது அதிகரித்துள்ளது.

கூடலூர் முதுமலை ஊராட்சி நம்பிக்குன்னு பகுதியைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய சுப்பிரமணி என்பவர் அறுவடை செய்த வாழையை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்புகையில் காட்டுயானை தாக்கி பலத்த காயமடைந்தார்.

elephant attack
elephant attack

இவருக்குக் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவரப்பட்டது. பின்னர் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இவரது தந்தை சுப்பிரமணியும் கடந்த ஆண்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். தந்தை மகன் இருவருமே யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

elephant attack
elephant attack

இது குறித்து போஸ்பாரா பகுதியைச் சேர்ந்த சுரேஷ், ``கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் ‌அதிகாலை திருமண நிகழ்வில் பங்கேற்கச் சென்ற முதியவர் சுப்பிரமணியை யானை தாக்கிக் கொன்றது. இவரது மகன் வேணுகோபாலையும் யானை தாக்கியதால் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பலனளிக்கவில்லை. மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நேற்று இரவு உயிரிழந்தார்’’ என வேதனையுடன் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு