Published:Updated:

நீலகிரி: `தேயிலை தொழிற்சாலை சுற்றி பார்க்கலாம்’ -பெற்ற மகளிடமே அத்துமீறிய கொடூரத் தந்தை!

போக்சோ
போக்சோ

தேயிலைத் தொழிற்சாலையை சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்று பெற்ற மகளின் கைகளை கயிற்றால் கட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொடூர தந்தை மீது போக்ஸோ வழக்கு பதியப்படு சிறையிலடைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு போன் செய்து, "என்னோட அப்பா எங்கிட்ட தப்பா நடந்துக்கிட்டார். இதைப்பத்தி வெளியே சொன்னா கென்றுவேன்னு மிரட்டுறார்" என அந்தச் சிறுமி அழுதுள்ளார்.

Child Abuse (Representational Image)
Child Abuse (Representational Image)

உஷாரான சைல்டு லைன் குழுவினர், அந்த சிறுமியின் வீட்டு முகவரி முதல் அவர் தந்தையின் செல்போன் எண் வரை அனைத்து தகவலையும் பெற்றனர். உடனடியாக குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

பெற்ற மகளிடமே அந்த தந்தை முதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருந்ததை காவல்துறையினர் விசாரணையில் உறுதி செய்தனர். அந்த கொடூர தந்தை மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து அந்த கொடூர தந்தை, விசாரணையில் தெரிவித்த வாக்குமூலத்தைக் கேட்டு காவல்துறையினரே பதறியுள்ளனர்.

இந்த கொடூரம் குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், "கோத்தகிரி சுற்றுவட்டாரத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி, அருகில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவர் வேலை செய்துவந்த தேயிலை தொழிற்சாலையை 3 குழந்தைகளுக்கும் சுற்றிக் காண்பிக்கிறேன் என கடந்த 23-ம் தேதி அழைத்துச் சென்றுள்ளார்.

Child Abuse (Representational Image)
Child Abuse (Representational Image)

அங்குள்ள ஒரு அறையில் இளைய மகள், மகனை அமர வைத்துவிட்டு,15 வயது சிறுமியான மூத்த மகளை மட்டும் அருகில் உள்ள மற்றொரு தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். தந்தையின் அத்துமீறலில் இருந்து தப்பிக்க சிறுமி முயன்றுள்ளார். மகளென்றும் பாராமல் கைகளை கயிற்றால் கட்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, 3 குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக இருந்ததாக சொல்கிறார். அது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

`10 வயது சிறுமிக்கு 51 வயது நபரால் நேர்ந்த கொடுமை!' - ஒரே நாளில் பதிவான இரு போக்சோ வழக்குகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில்,பெற்ற‌ மகளிடம் தந்தையே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது சிறார் பாதுகாப்பை தொடர்ந்து கேள்விக் குறியாக்கியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு