Published:Updated:

``போலீஸுக்கு உதவ முயன்று, என்னோட மகன் செத்துட்டான்!" - அமைச்சரிடம் கண்ணீர்விட்ட திமுக நிர்வாகி

திமுக நிர்வாகி கோவிந்தன்

`நான் தி.மு.க-வுல இருக்குறேங்குறதால என் மகன் இறந்ததற்கு, குடும்பத்துல ஒருத்தருக்கு வேலை கொடுக்காம அலைக்கழிச்சாங்க அ.தி.மு.க ஆட்சியில. பின்னர் உயர் நீதிமன்றம் சென்று வழக்கு போட்டு தீர்ப்பு வந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.' - கோவிந்தன்

``போலீஸுக்கு உதவ முயன்று, என்னோட மகன் செத்துட்டான்!" - அமைச்சரிடம் கண்ணீர்விட்ட திமுக நிர்வாகி

`நான் தி.மு.க-வுல இருக்குறேங்குறதால என் மகன் இறந்ததற்கு, குடும்பத்துல ஒருத்தருக்கு வேலை கொடுக்காம அலைக்கழிச்சாங்க அ.தி.மு.க ஆட்சியில. பின்னர் உயர் நீதிமன்றம் சென்று வழக்கு போட்டு தீர்ப்பு வந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.' - கோவிந்தன்

Published:Updated:
திமுக நிர்வாகி கோவிந்தன்

சேலம் மாவட்ட ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி கோவிந்தன் என்பவர், தன்னுடைய இரண்டாவது மகனுக்கு அரசு வேலை கேட்டு அமைச்சரிடம் மனு அளித்தார். அப்போது, ``ஐயா ஏற்கெனவே நான் உங்களிடம் மனு கொடுத்திருக்கேன். என்னோட மூத்த மகன் போலீஸுக்கு உதவி செய்யச் சென்று, துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோயிட்டான். இதனால என்னோட இரண்டாவது மகனுக்கு அரசு வேலை வழங்குவதாக அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில சொன்னாங்க.

திமுக நிர்வாகி கோவிந்தன்
திமுக நிர்வாகி கோவிந்தன்

ஆனா 2001 நடந்த சம்பவத்துக்கு இப்போவரைக்கும் எந்த உதவியும் எங்களுக்கு செய்லை. இது தொடர்பாக நான் முதலமைச்சர், உங்களிடம் பல்வேறு மனுக்கள் கொடுத்திருக்கேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை" என்றார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, ``பாத்துக்கலாம், பாத்துக்கலாம்" என்றார். அதனால் மன உளைச்சலடைந்த தி.மு.க நிர்வாகி கோவிந்தன், ``தி.மு.க-வுல கட்சிக்காரனுக்கே இந்த நிலைமைதானா... நான் 20 வருஷமா கட்சியில இருக்கேன். நான் தி.மு.க-வுல இருக்குறேங்குறதால என் மகன் இறந்ததற்கு, குடும்பத்துல ஒருத்தருக்கு வேலை கொடுக்காம அலைக்கழிச்சாங்க அ.தி.மு.க ஆட்சியில. பின்னர் உயர் நீதிமன்றம் சென்று வழக்கு போட்டு தீர்ப்பு வந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இப்போ தி.மு.க ஆட்சியிலாவது நடவடிக்கை எடுப்பீங்கன்னு பார்த்தா, இப்படி அலையவிடுறீங்களே..." என்று கண்ணீர்விட்டுப் புலம்பினார்.

உடனே கட்சி நிர்வாகிகளும், காவல்துறையினரும் அவரைக் கீழே அழைத்துச் சென்றனர். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோவிந்தன், ``கடந்த 2001-ம் ஆண்டு தாசநாயக்கன்பட்டி பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது டி.எஸ்.பி இளங்கோவன் தலைமையில் காவல்துறையினர் அங்கு கலவரத்தில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில், காவல்துறை நல்ல பேரு வாங்குறதுக்காக உதவி செய்யப் போன என்னோட மகன் சண்முகத்தைத் தவறுதலாகச் சுட்டுக் கொன்னுட்டாங்க.

சேலம் ஆட்சியர் அலுவலகம்
சேலம் ஆட்சியர் அலுவலகம்

அதற்கு அப்போதைய கலெக்ட,ர் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் முதற்கொண்டு மனு அளித்துவிட்டேன். ஆனால், அவர்கள் பரிசீலனை செய்யவேண்டி தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினால் அவர்கள் அதைத் தள்ளுபடி செய்துவிடுகின்றனர். இதனால் தமிழ்நாடு முதல்வருக்கும் பல மனுக்கள் அளித்துவிட்டேன் எந்தவித நடவடிக்கையும் இல்லை” என்றார்.