Published:Updated:

திருச்செந்தூர்: கோயில் உதவி ஆணையருடன் பெண் பக்தர் வாக்குவாதம்; வைரலான வீடியோ! - நடந்தது என்ன?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அதிகாரியிடம் பெண் பக்தர் ஒருவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகையாலும், அரையாண்டுத் தேர்வு விடுமுறையாலும் கடந்த சில நாட்களாக திருக்கோயிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், பொதுதரிசனம், ரூ.20, ரூ.100, மற்றும் ரூ.250 கட்டண தரிசன வழிகளில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பக்தர்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பக்தர்

இந்த நிலையில், திருக்கோயிலின் சண்முகவிலாச மண்டபத்திற்குள் பக்தர்கள் நுழைய முடியாத படி நாலாபுறமும் பேரிகார்டுகளை வைத்து தடுப்பு வேலிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் துலாபாரம் கொடுக்க முடியாமலும், அன்னதான உண்டியல் மற்றும் உண்டியல்கள் கூட காணிக்கை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதற்கிடையே கோயிலின் உள் பிரகாரத்தில் பெண் பக்தர் ஒருவர் கோயில் அதிகாரியிடம் நேரடியாக வாக்குவாதம் செய்வதைப் போலவும், தன்னுடைய ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை அந்த அதிகாரி தள்ளிவிட்டதால் உடைத்து விட்டதாகச் சொல்லி ஆக்ரோஷமாக பேசுவதும், கோயில் அதிகாரியை செக்ரியூட்டிகள் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு கொடுத்து ஒலிபெருக்கி அறைக்குள் அனுப்பி வைப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோயில் உள்பிரகாரத்தில் நடந்த சம்பவம் குறித்து கோயில் பணியாளர்கள் சிலரிடம் விசாரித்தோம், ``இரண்டு நாள்களுக்கு முன்பு மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கதேரில் எழுந்தருள வெளியே வரும்போது, சண்முகவிலாச மண்பத்தில் நேர் கேட் திறக்கப்பட்டது.

திருக்கோயில் உதவி ஆணையர் வெங்கடேஷ்
திருக்கோயில் உதவி ஆணையர் வெங்கடேஷ்

அப்போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்குள் வேமகாகச் சென்றதாகவும், இந்த பக்தர்கள் ரூ.100, ரூ.250 மற்றும் ரூ.20 வரிசையில் கம்பியை தாண்டி ஏறி குதித்ததாகவும், அப்போது பெண் பக்தர், அவருடன் வந்தவர்கள் எங்கும் செல்ல முடியாத படி தடுப்பு வேலிகள் இருந்ததால், அந்த பக்தர்கள் செல்போனில் படம் பிடித்தனர். அப்போது அங்கு வந்த உதவி ஆணையர் வெங்கடேஷ், செல்போனை பறிக்க முயன்ற போது, தவறி கீழே விழுந்து விட்டது. இதனால் பெண்ணுடன் வந்தவர்கள் கோபத்தில் அதிகாரியிடம் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்” என விவரித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இச்சம்பவம் குறித்து உதவி ஆணையர் வெங்கடேஷிடம் பேசினோம், ``திருச்செந்தூர் கோயிலில் கடந்த இரண்டு நாள்களாகவே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சுவாமி ஜெயந்திநாதார் தங்கத்தேரில் எழுந்தருளச் செய்வதற்காக, சுவாமியை சீர்பாதம் குழுவினர் தூக்கி வந்தனர். அப்போது, சண்முக விலாசத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் திடீரென உள்ளே நுழைந்து விட்டனர். இந்த பக்தர்களை ரூ.100 மற்றும் ரூ.20 கட்டண தரிசன பாதை வழியாக பிரித்து கோயில் பணியாளர்கள், செக்ரியூட்டிகள் அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது ரூ.20 கட்டண தரிசன பாதையில் வந்த பக்தர் ஒருவர் ஏறி குதித்து வீடியோ எடுத்தார். கோயில் உள்ளே வீடியோ எடுக்க கூடாது என்ற கட்டுபாடு உள்ளது.

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

அதனை மீறி எனது அருகில் வந்து எனது முகத்தை வீடியோ எடுத்தார். அப்போது நான் அவரது செல்போனை பறிக்க முயன்றபோது செல்போன் தவறி விழுந்தது. அப்போது அவருடன் வந்தவர்கள் என்னை கீழே தள்ளி விட்டனர். கோயில் பணியாளர்களும், செக்ரியூட்டிகளும் என்னை ஒலிபெருக்கி அறைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த நபருடன் வந்த பெண் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டு பேசினார். கீழே விழுந்த செல்போனை என்னிடமிருந்து பிடுங்கிச் சென்றார். அந்த வீடியோ எடுத்த பெண்ணிற்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. செல்போன் உடையவும் இல்லை” என்றார்.

திருச்செந்தூர் கோயிலை பொறுத்தவரை அடிக்கடி பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து அவ்வப்போது வீடியோக்கள் சமூக வலைதளங்கில் வேகமாக பரவி வருவது வழக்கமாகிவிட்டது. திருச்செந்தூர் கோயிலை திருப்பதி கோயிலுக்கு இணையாக மாற்ற போவதாக அறநிலையத்துறை உயரதிகாரிகள் சொன்னாலும் பக்தர்களிடம் கோயில் சுவாமி தரிசனம் செய்வதற்கு உகந்த சுமூகமான சூழ்நிலை இல்லை. இன்னும் பக்தர்களிடம் சிலர் பணத்தை பெற்றுக்கொண்டு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வது பக்தர்களுக்கு கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பக்தர்கள் கூட்டம் மிகுந்த நேரங்களில் பக்தர்களை பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில் குடிநீர் பிரச்னை, டாய்லெட் பிரச்னைகளில்கூட பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகிறது கோவில் நிர்வாகம்.

நீண்ட வரிசையில் பக்தர்கள்
நீண்ட வரிசையில் பக்தர்கள்

”மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் மூலம் அறநிலையத்துறைக்கு வருமானமாக கிடைக்கிறது. இந்த வருமானத்தில் சொற்ப நிதியை கூட பக்தர்களின் வசதிக்கு பயன்படுத்துவது கிடையாது. பக்தர்களுக்கு ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை ஆய்வு செய்ய அதிகாரிகள் உயர்மட்ட குழு அமைத்து நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகத்திற்கு ஏற்படும் பிரச்\னைகளை தவிர்க்க முடியும்” என்கிறார்கள் பக்தர்கள்.