Election bannerElection banner
Published:Updated:

பொள்ளாச்சி ஜெயராமன் மகன், எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர் மீது வழக்கு பதிவு - என்ன நடக்கிறது கோவையில்?

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன்
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன்

அடுத்தடுத்து இரண்டு முக்கியப் பிரமுகர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் கோவை அ.தி.மு.க-வினர் கதிகலங்கியுள்ளனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அவதூறு பரப்பிய வழக்கில் தி.மு.க பிரமுகர் கைது, இளைஞர் கைது என்றுதான் கோவை மாவட்டத்தில் அடிக்கடிச் செய்திகள் வலம்வரும். ஆனால், தேர்தல் நெருங்கும் நிலையில் கடந்த சில நாள்களாக அமைச்சர் வேலுமணி ஆதரவாளர் சந்திரசேகர் மீது போலீஸார் வழக்கு பதிவு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது போலீஸார் வழக்கு பதிவு போன்ற செய்திகள் அடிபடுவதால் கோவை அ.தி.மு.க-வினர் கதிகலங்கியுள்ளனர்.

சந்திரசேகர்
சந்திரசேகர்

கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையாளர் மாற்றத்தைத் தொடர்ந்துதான் இந்த அதிரடிகள் நடந்துவருகின்றன.

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ராசாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்த புகாரையடுத்து, அவர்கள் மாற்றப்பட்டு நாகராஜன் கோவை மாவட்ட ஆட்சியராகவும், டேவிட்சன் தேவாசீர்வாதம் கோவை காவல் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

சந்திரசேகர்
சந்திரசேகர்

நியமிக்கப்பட்ட சில நாள்களிலேயே தேர்தல் பணியில் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து நாகராஜன் உத்தரவிட்டார். இந்தநிலையில், வேலுமணியின் நிழலாக வலம்வரும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் மீது வடவள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை:``பாஜக-வுக்கு பிரசாரம் செய்ய வற்புறுத்துகின்றனர்” - தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆதங்கம்

``ஸ்டாலின் அவர்களுக்குச் சொல்கிறேன். கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒவ்வோர் ஆட்டை அனுப்பியிருக்கிறார். தேர்தல் முடிந்தவுடன் எங்கள் வெற்றி விழாவில் கிடா வெட்டி விருந்துவைப்போம். அப்போது, அந்த ஆடுகளை வெட்டுவோம். எல்லோரையும் வெட்டி, பிரியாணி செய்து கோயம்புத்தூரிலிருந்து அனுப்பவில்லையென்றால், அப்புறம் கேளுங்கள்... அமைச்சர் வேலுமணி யார் என்று.

சந்திரசேகர்
சந்திரசேகர்

இதைச் சவாலாகவே சொல்லிக்கொள்கிறேன்” என்று சந்திரசேகர் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். இது தொடர்பாக, தி.மு.க-வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சந்திரசேகர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, பொள்ளாச்சி ஒக்கிலிபாளையம் பகுதியில் தி.மு.க-வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். அப்போது தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்துவரும் பெண் விடுதலை கட்சி சபரிமாலா, பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்துப் பேசியதாக தெரிகிறது. இதனால், அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

பிரவீன்
பிரவீன்

அப்போது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், ஜெயராமனின் உதவியாளர் வீராசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தி.மு.க-வினர் மற்றும் சபரிமாலாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்தாகப் புகார் எழுந்தது. இது குறித்து தி.மு.க-வினர் புகாரும் அளித்திருந்தனர். இதையடுத்து, பிரவீன், வீராசாமி, ஜெயராமன் ஆகியோர் மீது வடக்கிபாளையம் போலீஸார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, அ.தி.மு.க-வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சபரிமாலா மற்றும் தி.மு.க-வினர் நான்கு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சபரிமாலாவை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பிரவீன் சாதியைச் சொல்லி திட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையிலும் போலீஸார் அவர்மீது மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளனர். ``நாங்கள் பிரசாரத்தில் யார் பெயரையும் பயன்படுத்தவில்லை.

Fact Check: பொள்ளாச்சி விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் தகவல் உண்மையா?

15 நாள்களுக்கு முன்பாகவே அந்த இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கிவிட்டோம். அந்த இடத்தில் பிரவீன், வீராசாமிக்கு என்ன வேலை? திட்டமிட்டு அ.தி.மு.க-வினர் பிரச்னை செய்கின்றனர்” என்று தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தநிலையில், தி.மு.க-வினர்தான் பிரச்னை செய்வதாக அ.தி.மு.க-வினர் கூறுகின்றனர். இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுப்போம்” என்றனர். ``அதிகாரிகள் மாறியதால்தான் இப்படிப் பாரபட்சம் இல்லாத நடவடிக்கைகளைப் பார்க்க முடிகிறது. எனவே, தேர்தல் முடியும் வரை இது போன்ற நடவடிக்கைகள் தொடர்வது அவசியம்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு