Published:Updated:

சிவகாசி: பட்டாசு ஆலையில் வெடிபொருள் உராய்வு காரணமாக விபத்து; ஒருவர் பலியான சோகம்!

வெடிவிபத்து

சிவகாசியில் வெடிபொருள் உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகாசி: பட்டாசு ஆலையில் வெடிபொருள் உராய்வு காரணமாக விபத்து; ஒருவர் பலியான சோகம்!

சிவகாசியில் வெடிபொருள் உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
வெடிவிபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள பூசாரித்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்குச் சொந்தமான காலிமனையில் ஷெட் அமைத்து வாடகையின்பேரில் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த திருப்பதி என்பவர் சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட வெடி உப்பு மற்றும் வேதிப்பொருள் கொண்டு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது உராய்வின் காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது

காயம்
காயம்

இந்த வெடிவிபத்தில் சிக்கி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த திருப்பதி அவர் உறவினரான நாகராஜ் (19) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவருக்கும் உடலில் 80 சதவிகித அளவுக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் தீக்காய அவசர சிகிச்சைப்பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திருப்பதியின் நிலை மோசமானதால் அவரை மதுரை மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு திருப்பதி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.