Published:Updated:

விருதுநகர்: வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிப்பு; 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் பலி!

பட்டாசு விபத்து

விருதுநகரில் சட்ட விரோதமாக வீட்டில்வைத்து பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்தபோது, சமையலறையில் ஏற்பட்ட தீப் பரவலின் காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், தாய், 5 வயது மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

விருதுநகர்: வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிப்பு; 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் பலி!

விருதுநகரில் சட்ட விரோதமாக வீட்டில்வைத்து பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்தபோது, சமையலறையில் ஏற்பட்ட தீப் பரவலின் காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், தாய், 5 வயது மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

Published:Updated:
பட்டாசு விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,050 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக ஆலைகள் இயங்காத நிலையில், கடந்த ஒரு வாரமாக 50 சதவிகிதப் பணியாளர்களுடன் பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. சாத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல வீடுகளில் சட்டவிரோதமாக கருந்திரிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.

பட்டாசு விபத்தில் இடிந்த வீடு
பட்டாசு விபத்தில் இடிந்த வீடு

இது தொடர்பாக போலீஸார் பலரைக் கைதுசெய்தும், தொடர்ந்து சட்ட விரோதமாகக் கருந்திரி தயார் செய்துவருகின்றனர். இருப்பினும், மீண்டும் மீண்டும் இந்தப் பகுதிகளிலுள்ள வீடுகளில் கருந்திரி மற்றும் பட்டாசு தயாரிப்பு தொடர்ந்துதான் வருகிறது. இந்தநிலையில், தாயில்பட்டி, கலைஞர் காலனியைச் சேர்ந்த சூர்யா என்பவர் தனது வீட்டில் இன்று காலை, ‘சோல்சா’ ரகப் பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது, அவரது வீட்டின் சமையலறையிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி, பட்டாசுகள்மீது பட்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், அவரது வீடு தரைமட்டமானது. அடுத்தடுத்த வீடுகளில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும் வெடித்ததில், அருகருகே இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில், அப்போலோ என்பவரின் மனைவி செல்வமணி, இவர்களது 5 வயது மகன் ரகபியாசல்மோன், காளிராஜ் என்பவரின் மனைவி கற்பகம் ஆகியோர் உயிரிழந்தனர். இதில், 75 சதவிகித தீக்காயத்துடன் சூர்யாவும், சோலையம்மாள் என்பவர் எலும்புமுறிவு ஏற்பட்டும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு விபத்து
பட்டாசு விபத்து

முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டுவந்தது தெரியவந்துள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகளும் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நிகழ்ந்த வெடி விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism