Published:Updated:

தண்ணீரில் மிதந்த நபர்; சடலம் என நினைத்து மீட்டவர்களுக்கு அதிர்ச்சி! - என்ன நடந்தது?

இளைஞர்

போதை தலைக்கேறியதால் தடுமாறிய முருகவேல், பாலத்துக்கு கீழே விழுந்துள்ளார். அவர் சாலை முழுவதும் தண்ணீர் இருப்பதாக கற்பனையாக நினைத்துக்கொண்டு ஓடை பாலத்தில் நிரம்பி இருந்த தண்ணீரில் நீந்திக் கொண்டே உள்ளே சென்றுள்ளார்.

தண்ணீரில் மிதந்த நபர்; சடலம் என நினைத்து மீட்டவர்களுக்கு அதிர்ச்சி! - என்ன நடந்தது?

போதை தலைக்கேறியதால் தடுமாறிய முருகவேல், பாலத்துக்கு கீழே விழுந்துள்ளார். அவர் சாலை முழுவதும் தண்ணீர் இருப்பதாக கற்பனையாக நினைத்துக்கொண்டு ஓடை பாலத்தில் நிரம்பி இருந்த தண்ணீரில் நீந்திக் கொண்டே உள்ளே சென்றுள்ளார்.

Published:Updated:
இளைஞர்

திண்டுக்கல் மாவட்டம் ஆலகுவார்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் அதேபகுதியில் உள்ள தனியார் மில்லில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்த முருகவேல், சீலப்பாடி பகுதியில் உள்ள கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்துவிட்டு அருகே இருந்த ஓடை பாலத்தில் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது போதை தலைக்கேறியதால் தடுமாறிய முருகவேல், பாலத்துக்கு கீழே விழுந்துள்ளார். மேலும் அவர் சாலை முழுவதும் தண்ணீர் இருப்பதாக கற்பனையாக நினைத்துக்கொண்டு ஓடை பாலத்தில் நிரம்பி இருந்த தண்ணீரில் நீந்திக் கொண்டே உள்ளே சென்றுள்ளார்.

மீட்பு
மீட்பு

சுமார் மூன்று மணி நேரமாக மிதந்த முருகவேலை கள்ளச்சந்தையில் மது வாங்க வந்திருந்த மற்றொரு நபர் ஓடை பாலத்தின் அடியில் ஒரு உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து, தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்பதற்காக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்க முயற்சி செய்தபோது பெரும் சத்தத்துடன் தண்ணீரில் நீந்திக் கொண்டே ஓடை பாலத்தின் அடியில் இருந்து இறந்ததாக கருதப்பட்ட அந்த உடல் வெளியே எட்டிப்பார்த்தது அதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிர்ச்சி
அதிர்ச்சி

பின்னர் அவரை மீட்டு அவர் சட்டைப்பையில் வைத்திருந்த அடையாள அட்டையை வைத்து தாடிக்கொம்பு அருகே உள்ள ஆலக்குவார்பட்டியைச் சேர்ந்த முருகவேல் என்றும், இவர் தனியார் மில் ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவரவே முருகவேலின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் பாலத்தின் கீழ் தண்ணீரில் மிதந்த நபரை உயிரிழந்ததாக நினைத்து போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அருகே இருந்தவர்கள் உயிரிழந்தவர் தான் எழுந்து வருகிறார் என நினைத்து மிரண்டு விட்டனர்.