Published:Updated:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு முதல் பலி! - கலக்கத்தில் மக்கள்

கொரோனா பாதிப்பிற்கு முதல் பலி
கொரோனா பாதிப்பிற்கு முதல் பலி

இறந்த முதியவருக்கு ஏற்கெனவே, சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு ஆகிய பாதிப்புகளும் இருந்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை முத்துலெட்சுமி நினைவு அரசு மருத்துவமனை, ராணியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்குத் தனிமைப்படுத்த வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை நகர் வடக்கு 5-ம் வீதியைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் புதுக்கோட்டை அரசு ராணியார் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்காக அவரின் மாதிரிகள் கொரோனா வைரஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதற்கிடையே, நோயாளிக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இறந்த முதியவருக்கு ஏற்கெனவே, சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு ஆகிய பாதிப்புகளும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் இதுவரையிலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஒன்றரை வயது சிறுவன் உட்பட 16 பேர் வரையிலும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டையில் முதல் இறப்பு நடைபெற்றுள்ளது. இதனால், புதுக்கோட்டை மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

வாழ்வின் போக்கை மாற்றி நம்மை நமக்கு உணர்த்திய கொரோனா... ஓர் பாசிட்டிவ் பார்வை!

இதுபற்றி மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, ``கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், தொடர் சிகிச்சை மூலம் அவர்களைக் குணப்படுத்தி வருகிறோம். இறந்த முதியவருக்கு ரத்தக்கொதிப்பு, இதயக்கோளாறு நோய்கள் இறந்ததுதான் இறப்புக்கு முக்கியக் காரணம். இதுபோன்ற பிரச்னைகள் உள்ள முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் எல்லாம் முடிந்த அளவிற்கு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். நமக்கு எல்லாம் வராது என்று அலட்சியம் காட்டக் கூடாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு