Published:Updated:

தமிழக வனத்துறையில் முதல் திருநங்கை!- ஊட்டியில் தடம் பதித்த தீப்தி

Deepthi
Deepthi

21வயதான தீப்தி ஊட்டியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பொறுப்பேற்று வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீப்தி. இவரின் தந்தை சுப்ரமணியம். இவர், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக் காவலராக பணியாற்றிவந்தார். கடந்த 2007-ம் ஆண்டு சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

Deepthi
Deepthi

C.A படிக்க வேண்டும் என்ற கனவில் தீப்தி இளம் வணிகவியல் (B.com) பட்டத்தை முடித்தார். ஆனால், இவரின் தாய் மாலதி தன் கணவரின் வனத்துறை பணிக்கு தீப்தி செல்ல வேண்டும் என விரும்பினார். தீப்தியின் தந்தை பணியில் இருக்கும்போது உயிரிழந்ததால், அவருக்கு வனத்துறையில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து, தன் தாய் மாலதியின் விருப்பத்துக்கு ஏற்ப தமிழக வனத்துறையில் சேர்ந்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பொறுப்பேற்றார்.

Deepthi
Deepthi

இதன் மூலம் வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை தீப்தி பெற்றுள்ளார். அபினயா மற்றும் சந்தியா ஆகிய இரண்டு திருநங்கைளே கல்வி கற்க பொருளாதார ரீதியாக மிகவும் உதவியாக இருந்தனர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு