Published:Updated:

`பேரல்களில் மிதவைக் குடில்; நான்கு நாள்களாக தியானம்!'- கடலோர காவல்படைக்கு அதிர்ச்சிகொடுத்த மீனவர்

குடில் அமைத்து மீனவர் தியானம்
News
குடில் அமைத்து மீனவர் தியானம்

கோடியக்கரை அருகே கடலில் மிதவைக் குடில் அமைத்து மீனவர் தியானம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோடியக்கரை அருகே கடல் பரப்பில் மிதவையில் அமர்ந்து மீனவர்களின் நலன் வேண்டி நான்கு நாள்களாக மீனவர் ஒருவர் தியானம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குடில் அமைத்து மீனவர் தியானம்
குடில் அமைத்து மீனவர் தியானம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் சாகர் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கோடியக்கரை படகுத்துறைக்கு தென் மேற்கே சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு மிதவை கடலில் மிதப்பது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு வேதாரண்யம் கடலோரக் காவல் படை டி.எஸ்.பி. குமார், இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் போலீஸார் ஒரு படகில் அங்கு சென்றனர். அந்த மிதவைப் படகு பிளாஸ்டிக் பேரல்களால் செய்யப்பட்டு, அதன் மேல் மூங்கில் மற்றும் தென்னங்கீற்றுகளால் கூரை போடப்பட்டு குடில்போல் அமைக்கப்பட்டிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

போலீஸார் அதன் உள்ளே சென்று பார்த்தபோது, அதில் ஒருவர் மட்டும் இருப்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் நாகூரை அடுத்த பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர் கலியபெருமாள் (65) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கடந்த நான்கு நாள்களாக அந்த மிதவையில் அமர்ந்து மன அமைதிக்காகவும், மீனவர் நலனுக்காகவும் தியானம் செய்வதாக தெரிவித்தார்.

குடில் அமைத்து மீனவர் தியானம்
குடில் அமைத்து மீனவர் தியானம்

இதையடுத்து அவரை உடனடியாக கரைக்குத் திரும்ப கடலோரக் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிமுத்துராமலிங்கம் அறிவுறுத்தினார். ஆனால் அதனை ஏற்காது, தொடர்ந்து கலியபெருமாள் 5 -வது நாளாக கடலில் தியானம் செய்து வருகிறார். "தியானம் செய்பவருக்கு கடலில் பாரல் வைத்து மிதவைக் குடில் அமைத்துக் கொடுத்தது யார் என்றும், அவர் எதற்காக தியானம் மேற்கொள்கிறார் என்றும்" தனிப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.