Published:Updated:

கொள்ளிடம்: ஆர்ப்பரிக்கும் வெள்ளம்; மீட்புப்பணியில் 400 இளைஞர்கள் - அரியலூர் ஆட்சியர் நம்பிக்கை

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு

``யாருக்கும் எந்தவிதப் பிரச்னையாக இருந்தாலும் தயங்காமல் அழைத்துப் பேசலாம். உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்.” - அரியலூர் ஆட்சியர்.

கொள்ளிடம்: ஆர்ப்பரிக்கும் வெள்ளம்; மீட்புப்பணியில் 400 இளைஞர்கள் - அரியலூர் ஆட்சியர் நம்பிக்கை

``யாருக்கும் எந்தவிதப் பிரச்னையாக இருந்தாலும் தயங்காமல் அழைத்துப் பேசலாம். உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்.” - அரியலூர் ஆட்சியர்.

Published:Updated:
கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு

``கொள்ளிடத்தில் திறந்துவிடப்படும் உபரிநீரால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வெள்ளம் பாதித்தால் மக்களைக் காப்பற்ற 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தயார்நிலையில் இருக்கிறார்கள். அதேபோல் உணவுப்பொருள்கள், இருப்பிட வசதி என அனைத்தும் தயாராக இருக்கின்றன” என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

அரியலூர்
அரியலூர்

அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில். ``கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் வந்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என 12 பகுதிகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைப்பதற்காகப் பள்ளிக்கூடங்கள், சமுதாயக்கூடங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரியலூர் கலெக்டர் ஆபீஸ்.
அரியலூர் கலெக்டர் ஆபீஸ்.

அவர்களுக்குச் சாப்பாடு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்க அந்தந்த கிராம ஊராட்சித் தலைவர்களைத் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றி அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் இருப்புவைக்கவும் கூட்டுறவுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தாழ்வான பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக, முழுமையாகச் செய்து தர தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கடும் வெள்ளப்பெருக்கு
கடும் வெள்ளப்பெருக்கு

கொள்ளிடத்தில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும், அதனால் பொதுமக்களோ கால்நடைகளோ பாதிக்காமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துவருகிறோம். அந்தந்தப் பகுதிகளிலுள்ள 400 இளைஞர்களைத் தயார்செய்து அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவும் அவர்கள் தயார்நிலையில் இருக்கின்றனர்.

காவல்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு கொள்ளிடம் கரையோரத்திலுள்ள கிராமங்களை 24 மணி நேரமும் கண்காணித்துக்கொண்டிருக்கிறோம். அதிக அளவில் தண்ணீர் வந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைவிட பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி
அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி

இதற்காக அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் தாழ்வான பகுதிகளிலுள்ள விவசாய சாகுபடி செய்திருக்கும் பயிர்கள் குறித்த முழு விவரங்களையும் தயார்செய்து வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர்கள் பயிர்க் காப்பீடு பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கரையோரம் உள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

கொள்ளிடத்தில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு
கொள்ளிடத்தில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு

வெள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் செல்போனுக்கு எப்போது வேண்டுமென்றாலும் தொடர்புகொள்ளலாம். மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொண்டு வெள்ள சேதங்கள் குறித்து தெரிவிக்கலாம். யாருக்கு, எந்தவிதப் பிரச்னையாக இருந்தாலும் தயங்காமல் அழைத்துப் பேசலாம். உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.