Published:Updated:

நெல்லை: பழைய பரோட்டா சூடுபடுத்தி விற்பனை; உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை!

ஹோட்டலில் இருந்த பழைய பரோட்டா
News
ஹோட்டலில் இருந்த பழைய பரோட்டா

`மக்களுக்குத் தீங்கு விளைக்கும் வகையில் பழைய பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

Published:Updated:

நெல்லை: பழைய பரோட்டா சூடுபடுத்தி விற்பனை; உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை!

`மக்களுக்குத் தீங்கு விளைக்கும் வகையில் பழைய பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

ஹோட்டலில் இருந்த பழைய பரோட்டா
News
ஹோட்டலில் இருந்த பழைய பரோட்டா

பொதுமக்களிடம் பரோட்டா சாப்பிடும் ஆர்வம் அதிகரித்துவருகிறது. மைதாவால் செய்யப்படும் பரோட்டா அதிகமாக உண்பது உடல்நலத்துக்கு தீங்கானது என்று மருத்துவர்கள் எச்சரித்துவரும்போதிலும், நாவுக்கு சுவையளிக்கும் வகையில் தயாரிக்கப்படுவதால் பரோட்டா சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

ஹோட்டலில் சோதனையிடும் அதிகாரிகள்
ஹோட்டலில் சோதனையிடும் அதிகாரிகள்

பெரும்பாலும் பரோட்டாக்களைச் சூடாக சாப்பிடவே பலரும் விரும்புகிறார்கள். ஆனால், முந்தைய நாளில் மீதமாகும் பழைய பரோட்டாகளை குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்திவைத்து, பின்னர் மறுநாள் தண்ணீரில் முக்கி மீண்டும் கல்லில் போட்டுச் சூடுபடுத்தி விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், நெல்லை மாநகரப் பகுதியிலுள்ள ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்குத் தரமான உணவு வழங்கப்படுகிறதா எனப் பரிசோதிக்க உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. அதன்பேரில், அதிகாரிகள் நெல்லை மாநகரில் பரோட்டா தண்ணீரில் நனைத்துச் சூடு செய்து விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர் .

உணவுக் கூடத்தில் ஆய்வு
உணவுக் கூடத்தில் ஆய்வு

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சங்கரலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள உணவகங்களில் சோதனை மேற்கொண்டார்கள்.

அப்போது, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கடையில், வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீரில் நனைத்து மீண்டும் சூடுபடுத்தி விநியோகம் செய்வதற்காகக் குளிர்சாதனப் பட்டியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ பரோட்டாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, மேலப்பாளையம் பகுதியில் 10 கிலோ பராட்டா பறிமுதல் செய்யப்பட்டது.

அழிக்கப்பட்ட பரோட்டா
அழிக்கப்பட்ட பரோட்டா

சுமார் 50 கிலோ எடையுள்ள வேதிப் பொருள்கள் கலந்த அஜினோமோட்டா, கலர் பொடிகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மக்களுக்குத் தீங்கு விளைக்கும் வகையில் வேதிப்பொருள்கள் மற்றும் பழைய பரோட்டா உள்ளிட்ட உணவுப் பொருள்களைப் பயன்படுத்தும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.