Published:Updated:

கோவை: மாணவர்கள், இளைஞர்கள் குறி..! - `மதுபான' ஐஸ்க்ரீம் கடைக்கு சீல்

கோவை அவிநாசி சாலையில் ஐஸ்க்ரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் தனியார் வணிக வளாகம் ஒன்று இருக்கிறது. அங்கு `ரோலிங் டௌஃப் கபே’ என்ற ஐஸ்க்ரீம் கடை செயல்பட்டுவந்தது. இந்தக் கடையில் மது பானம் கலந்த ஐஸ்க்ரீம்கள் விற்பனை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது.

கோவை ஐஸ்க்ரீம் கடை
கோவை ஐஸ்க்ரீம் கடை
மாணவிக்கு ஆபாச மெசேஜ்! - கோவை பேரூர் தமிழ்க் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

இதன் காரணமாக மாணவர்களும் இளைஞர்களும் அதிக அளவில் அந்தக் கடைக்கு வருவதாகவும் புகார் சொல்லப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்தக் கடையில் சோதனை செய்தனர்.

இது குறித்து மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``அந்தக் கடையில் இரண்டு மது பாட்டில்கள், காலாவதியான உணவுப்பொருள்கள் இருந்தன. அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனர்‌.

இந்த ஆய்வின்போது கடையில் உணவைக் கையாளுபவர்கள் உரிய மருத்துவத் தகுதிச் சான்று பெறவில்லை. முக்கியமாக, உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிக அளவில் காணப்பட்டன. உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமாக இல்லை .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல ஊழியர்கள் முறையான முகக்கவசம், தலை உறை, கையுறை அணிந்து பணிபுரியவில்லை. உணவுப் பாதுகாப்பு துறையின்கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

சீல்
சீல்

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் கடையின் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கும் அதிரடியாக சீல் வைத்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு