Published:Updated:

`போடி.. பெரியகுளம்.. தேவதானப்பட்டி!'- தேனி காடுகளில் தினம் தினம் காட்டுத் தீ சோகம்

காட்டுத் தீ
காட்டுத் தீ

`காட்டுக்கு தீ வைக்கும் சமூக விரோதிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்' என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக, தேனியின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. `காட்டுக்குத் தீ வைக்கும் சமூக விரோதிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும்' என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

காட்டுத்தீ
காட்டுத்தீ

நேற்று இரவு, பெரியகுளம் அருகே உள்ள தைலாராமன் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதனால், அருகே இருக்கும் குடியிருப்புப் பகுதியினர், மிகுந்த அச்சமடைந்தனர். அவர்களிடம் பேசும்போது, ``சுமார் 50 ஏக்கருக்கு மேல், தீயில் எரிந்து நாசமானது. பல மூலிகைகள் இந்த மலையில் உள்ளன. அரியவகை நாட்டு ரக மரங்கள் உள்ளன. அனைத்தும் தீயில் கருகியது. காட்டுத்தீ என்றால், தீயணைப்புத்துறையினரால் இங்கே வரமுடியாது. வனத்துறை தான், அவர்களின் பணியாளர்களைக் கொண்டு தீ பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அவர்களுக்குத் தகவல் தெரிவித்தும் பலனில்லை.

625 காளைகள்.. 500 காளையர்கள்.. தேனி அய்யம்பட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு!

இன்று பெரியகுளத்தில் தீ எரிந்தது. சில நாள்களாக போடி அருகே உள்ள மலைப்பகுதிகளில் தீ எரிந்தது. அதற்கு முன்னதாக, தேவதானப்பட்டி மலைப்பகுதியில் தீ எரிந்தது. தினம் தினம் தேனியில் ஏதாவது ஒரு மலையில் தீ எரிந்துகொண்டுதான் இருக்கிறது. குரங்கணி சம்பவம் நினைவை விட்டு நீங்காத நிலையில், சமூக விரோதிகள் சிலர் காடுகளுக்குத் தீ வைக்கின்றனர். அவர்களைப் பிடித்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும்” என்றனர்.

காட்டுத்தீ
காட்டுத்தீ

இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``யார் தீ வைத்தது என விசாரித்துவருகிறோம். வெயில் அதிகரித்துள்ளதால், ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்குப் போதிய புற்கள் கிடைக்காது. அதனால், மலை அடிவாரப்பகுதியில் உள்ள காய்ந்த புற்களுக்குத் தீவைக்கின்றனர். தீயில் எரிந்த புற்கள், புதிதாக வளரும். அந்தப் புற்கள் ஆடு, மாடுகளுக்கு சத்துள்ள உணவாக இருக்கும். இதனால்தான் தீ வைக்கின்றனர். மலை அடிவாரப்பகுதி மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு செய்திருக்கிறோம். தீவிர கண்காணிப்பில் இருக்கிறோம். வனத்துக்குத் தீ வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

`என் மனைவியிடம் போனில் தவறாகப் பேசியது யார்?’-நிதி நிறுவன ஊழியர்களை அரிவாளால் மிரட்டிய தேனி தொழிலாளி
அடுத்த கட்டுரைக்கு