Published:Updated:

உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ்; முன்னாள் மனைவிமீது புகாரளித்த நபர்! - என்ன நடந்தது?

முன்னாள் மனைவிமீது புகாரளித்த நபர்

தான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் பெற்று சொத்தை மோசடி செய்ய முயன்றதாக முன்னாள் மனைவிமீது சந்திரசேகர் என்பவர் புகாரளித்திருக்கிறார்.

உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ்; முன்னாள் மனைவிமீது புகாரளித்த நபர்! - என்ன நடந்தது?

தான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் பெற்று சொத்தை மோசடி செய்ய முயன்றதாக முன்னாள் மனைவிமீது சந்திரசேகர் என்பவர் புகாரளித்திருக்கிறார்.

Published:Updated:
முன்னாள் மனைவிமீது புகாரளித்த நபர்

``உயிருடன் இருக்கும் எனக்கு இறப்பு சான்றிதழ் பெற்று சொத்துகளை மோசடியாக விற்பனைசெய்த முன்னாள் மனைவிமீதும், உடந்தையாக இருந்த அரசு ஊழியர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சந்திரசேகர் என்பவர் கலெக்டரிடம் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கலெக்டரிடம் புகார்
கலெக்டரிடம் புகார்

இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்த சிவகங்கை மாவட்டம், கண்டனூரைச் சேர்ந்த சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``எனக்கும் காரைக்குடியைச் சேர்ந்த நதியாஸ்ரீக்கும் 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019-ல் நீதிமன்றம் மூலம் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், சமீபத்தில் கண்டனூரில் எனக்குச் சொந்தமான  11.25 சென்ட் இடத்தை விற்பனை செய்ய முயன்றபோதுதான், அது ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது என் முன்னாள் மனைவி நதியாஸ்ரீ, கடந்த  24.11. 2015 அன்று நான் இறந்துவிட்டதாக  காரைக்குடி நகராட்சியில் இறப்பு சான்றிதழும், என் பெற்றோர் வாசுகி தேவி-அண்ணாமலை இறந்துவிட்டதாக வாரிசு சான்றிதழை காரைக்குடி தாலுகா அலுவலகத்திலும் பெற்று என் பெயரிலிருந்த 11.25 சென்ட் இடத்தை, காரைக்குடி சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் உதவியுடன் கலைக்கோவன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

கலெக்டரிடம் புகார்
கலெக்டரிடம் புகார்

என் வீடு அருகேயுள்ள இடத்தை எனக்கே தெரியாமல் என் முன்னாள் மனைவி விற்பனை செய்தது தாமதமாகத்தான் தெரியவந்தது. உடனே பத்திரப்பதிவு அலுவலகம் சென்று, நான் உயிருடன் இருக்கும் ஆவணங்களை காட்டியதைத் தொடர்ந்து நதியாஸ்ரீ விற்பனை செய்த பத்திரத்தை ரத்து செய்தனர்.

இது குறித்து தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், சிவகங்கை எஸ்.பி-க்கும் புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. உயிரோடு இருக்கும் என்னை விசாரிக்காமல் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் அளித்த நகராட்சி, வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள், பதிவுத்துறை அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முறைகேட்டில் ஈடுபட்ட என் மனைவிமீது வழக்கு பதிவுசெய்ய வலியுறுத்தியும் கலெக்டரிடம் மனு அளித்தேன்" என்றார்.

சந்திரசேகர்
சந்திரசேகர்

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், ``விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.