Published:Updated:

`60,000 பேர்; 10 காய்கறிகள் கொண்ட தொகுப்பு!’- முன்னாள் எம்.பியால் நெகிழும் சிவகங்கை மக்கள்

முன்னாள் எம்.பி., செந்தில்நாதன்
முன்னாள் எம்.பி., செந்தில்நாதன்

`60,000 பேருக்குத் தலா 10 வகையான காய்கறிகள் அடங்கிய பொருள்களை வழங்கலாம் எனத் திட்டமிட்டோம்’.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால், பலர் வருமானமின்றி உணவிற்காகப் பசியால் வாடும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் அரசும் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றனர்.

தக்காளிக் கூடைகள்
தக்காளிக் கூடைகள்

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி உள்ளிட்ட பகுதியில் கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர். இந்நிலையில் வீடுகளை விட்டு வெளியே செல்லமுடியாமல் தவித்துவரும் பொதுமக்களுக்குப் பலரும் உதவிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., செந்தில்நாதன் மாவட்டத்தில் உள்ள பல இடங்களுக்கு 20 டீம்களைப் பிரித்து தனது சொந்தச் செலவில் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

இதுகுறித்து செந்தில்நாதனிடம் பேசியபோது,``சிவகங்கை மாவட்டம் அதிகப்படியான கிராம மக்களைக் கொண்டது. ஊரடங்கு உத்தரவால் பலரும் வேலைக்குச் செல்லமுடியாத சூழலில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கையில் முடிந்தவரை அடிப்படை தேவைகளை செய்து உதவலாம் எனத் தோன்றியது. இதனடிப்படையில் அரிசி அல்லது மளிகை பொருள்கள் வழங்கலாமா என்று தோன்றியது.

லாரிகளில் காய்கறிகள்
லாரிகளில் காய்கறிகள்

ஆனால், அரிசி ரேசன் கடைகள் வழங்குவதால் மக்கள் அரிசி வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அதே சமயத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவாசாயிகள் விளைவித்த பொருள்களை விற்பனை செய்யமுடியாமல் தவித்தனர்.

எனவே, இதை ஈடுசெய்யும் வகையில் அவர்களிடம் காய்கறிகளை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு வழங்கலாம் என முடிவு செய்தேன். 60,000 பேருக்குத் தலா 10 வகையான காய்கறிகள் அடங்கிய பொருள்களை வழங்கலாம் எனத் திட்டமிட்டோம்.

காய்கறிகள்
காய்கறிகள்

அதன்படி கடந்த 4ம் தேதி முதல் காய்கறிகளை வழங்கத் தொடங்கினோம். இதற்காக 20 டீம்களை அமைத்துள்ளேன். அவர்கள் தேவகோட்டை, காரைக்குடி, புதுவயல், கண்டனூர், சாக்கொட்டை ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகளை வழங்கி வருகின்றனர்.

இவற்றில் குறிப்பிட்ட காய்கறிகளை சிவகங்கை மாவட்டத்திலேயே வாங்கிவிட்டோம். தட்டுப்பாடான காய்கறிகள் மதுரை பரவை மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்தோம்.

லாரிகளில் காய்கள்
லாரிகளில் காய்கள்

காய்கறி வழங்கும் முதல்நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கலந்துகொண்டு காய்கறிப் பொருள்களை வழங்கினர். பொதுமக்களுக்குக் காய்கறி கொடுக்கும் பணி தற்போது பாதி அளவு நிறைவடைந்துள்ளது’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு