Published:Updated:

`10,000 உறுப்பினர்கள், 80 நிர்வாகிகள்’ - தி.மு.க-வில் என்ட்ரி கொடுக்கும் மகேந்திரன்

மகேந்திரன்
மகேந்திரன்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் இன்று தி.மு.க-வில் இணைகிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு, அதிக வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்தார். தொடர்ந்து அந்தக் கட்சியில் ஆக்டிவாக இருந்த மகேந்திரன், கடந்த சட்டசபைத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார்.

மகேந்திரன்- கமல்
மகேந்திரன்- கமல்
மகேந்திரன் முதல் பத்மப்ரியா வரை... எவிக்ட் ஆகும் பிரபலங்கள் - `பிக் பாஸ்’ கமல் நிலை என்ன?

கமலுக்கு அடுத்தபடியாக அந்தக் கட்சியில் அதிக வாக்குகளை வாங்கினார் மகேந்திரன். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கட்சியிலிருந்து விலகினார்.

அப்போதிருந்தே அவர் தி.மு.க-வில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியானது. இது குறித்து கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தையும் நடந்துவந்தது. மக்கள் நீதி மய்யத்திலுள்ள பலரையும் தி.மு.க பக்கம் இழுக்க மகேந்திரன் தூண்டில் போடுவதாகவும் ம.நீ.ம-வினர் குற்றம்சாட்டிவந்தனர். இந்தநிலையில் இன்று மாலை 4-5 மணியளவில்,

ஸ்டாலின்
ஸ்டாலின்

முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மகேந்திரன் தி.மு.க-வில் இணையவிருக்கிறார். இந்த நிகழ்வின்போது மகேந்திரனுடன் சேர்த்து மய்யத்திலிருந்து வெளியேறிய 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க-வில் இணையப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க-வில் இணைவதற்காக 10,000 நபர்களின் ஆதார் கார்டு நகல்களும் கொடுக்கப்படவிருக்கின்றனவாம். முக்கியமாக, சட்டசபைத் தேர்தலில் மய்யம் சார்பாகப் போட்டியிட்ட சுமார் 10 வேட்பாளர்களும் தி.மு.க-வில் இணையவிருக்கிறார்கள். மகேந்திரனுக்கு விரைவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகேந்திரன் முதல் பத்மப்ரியா வரை... எவிக்ட் ஆகும் பிரபலங்கள் - `பிக் பாஸ்’ கமல் நிலை என்ன?

அவரது வருகை கொங்கு மண்டல தி.மு.க-வை ஓரளவுக்கு வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் மகேந்திரனுக்குப் பெரிய பொறுப்பு வழங்கக் கூடாது என்று இப்போதே சில உள்ளூர் உடன்பிறப்புகள் முட்டுக்கட்டை போடத் தொடங்கிவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு