Published:Updated:

`கல்லூரிக்கு அனிதா பெயர் வைப்பதைவிடவும் இதுவே முக்கியம்!' - நீட் விவகாரம் குறித்து சபரிமாலா

சபரிமாலா
சபரிமாலா

முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியரும், பெண் விடுதலைக் கட்சி தலைவருமான சபரிமாலா, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம் அனிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட் தேர்வை கடுமையாக எதிர்த்த தி.மு.க, ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்" என்று கூறியது.

அனிதா
அனிதா

ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தும் கூட இந்த ஆண்டும் நீட் தேர்வு நடக்கவிருக்கிறது. அண்மையில், சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில், ``அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயரை வைக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியரும், பெண் விடுதலைக் கட்சி தலைவருமான சபரிமாலா, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த நகலை கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் வழங்கினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபரிமாலா,

சபரிமாலா
சபரிமாலா
`தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை!' - கருத்துக் கணிப்பில் 87% பேர் கருத்து

``குடியரசு தலைவர், பிரதமர், அனைத்து ஆளுநர்கள், ஆட்சியர்கள் ஆகியோருக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற மகிழ்வில் இருந்தோம். ஆனால், தற்போது நீட் தேர்வு அறிவிப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பத்தே நாள்களில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தனர். மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயர் வைப்பது முதல் கடமை இல்லை. அனிதா உள்ளிட்ட 18 மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். அதை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம். இது தேசிய அவமானம். இவ்வளவு சாதனைகள் செய்தும்,

சபரிமாலா
சபரிமாலா
`திமுக-வுக்கு இது நல்லதல்ல!' - கொதிக்கும் கல்வியாளர்கள்; புதிய கல்விக்கொள்கைக்கு துணை போகும் அரசு?

மாணவர்களுக்கான சட்டப் போராட்டம் நடத்த நான்கு ஆண்டுகள் ஆகிறது என்றால் இது மாநில அவமானம். எனவே, நீட் தேர்வை ரத்து செய்வதுதான் முதல் கடமை. அது இந்த ஆட்சியில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு