Published:Updated:

தம்பி வேட்டியை தமிழக முதலமைச்சருக்கு பரிசளித்த ராம்ராஜ் நிறுவனர்!

தமிழக முதலமைச்சருக்கு பரிசளித்த ராம்ராஜ் நிறுவனர்

செஸ் திருவிழாவைக் கொண்டாடும் விதமாகத் தமிழகம் முழுவதும் செஸ் வடிவிலான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக அறிமுகமாகியுள்ள ராம்ராஜ் -ன் தம்பி வேட்டியைத் தமிழக முதலமைச்சருக்கு பரிசளித்த ராம்ராஜ் நிறுவனர்.

தம்பி வேட்டியை தமிழக முதலமைச்சருக்கு பரிசளித்த ராம்ராஜ் நிறுவனர்!

செஸ் திருவிழாவைக் கொண்டாடும் விதமாகத் தமிழகம் முழுவதும் செஸ் வடிவிலான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக அறிமுகமாகியுள்ள ராம்ராஜ் -ன் தம்பி வேட்டியைத் தமிழக முதலமைச்சருக்கு பரிசளித்த ராம்ராஜ் நிறுவனர்.

Published:Updated:
தமிழக முதலமைச்சருக்கு பரிசளித்த ராம்ராஜ் நிறுவனர்
கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி வெகு விமர்சையாக சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 188 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த செஸ் திருவிழாவைக் கொண்டாடும் விதமாகத் தமிழகம் முழுவதும் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் செஸ் வடிவிலான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பாரம்பரிய வேட்டி சட்டைகள் தயாரித்து வரும் முன்னணி நிறுவனமான ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வழக்கமான பாணியில் இல்லாமல் கருப்பு வெள்ளை கட்டம் போட்ட பார்டரில் செஸ் போர்டு வடிவிலான தம்பி வேட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் திரு.கே ஆர் நாகராஜன், தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டிகளைத் தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

தம்பி வேட்டிகள்
தம்பி வேட்டிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது பற்றிக் கூறியுள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனம், " தம்பி என்ற பெருமிதம் மிக்க அடையாள உருவமானது, நெஞ்சு நிமிர்த்தி,கைகளை மடக்கிக் கட்டிக்கொண்டு, வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பீரமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சிறந்த தேர்வான “தம்பி” ஏற்கனவே பல வீடுகளில் பரசித்தி பெற்ற பெயர் ஆகும். உயர்தரமான பருத்தியில் நெய்யப்பட்ட வேஷ்டியும் சட்டையும் இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் அடையாளப்படுத்துகிறது. எங்கள் ராம்ராஜ் நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும் நவீன போக்கிற்கு ஏற்ப புதுப் புது ஃபாஷனில் வேட்டிகளைச் சந்தைப்படுத்துகிறோம். இன்று எல்லா வயதினருக்கும் வேஷ்டி என்ற விஷயத்தில் இந்திய நாகரீக ஆடைகள் துறையில் ராம்ராஜ் புத்தாக்க கண்டுபிடிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அடக்கமான வேஷ்டிகள் என்ற இடத்திலிருந்து ராம்ராஜ் இதை மேன்மையான இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

இந்நிலையில் செஸ் திருவிழாவைக் கொண்டாடும் விதமாகக் குறைந்த காலமே விற்பனைக்குக் கிடைக்கும் வேட்டியாகத் தம்பி வேட்டியை அறிமுகம் செய்வதில் ராம்ராஜ் பெருமை கொள்கிறது. இது செஸ் விளையாட்டிற்கும் தம்பி என்ற அடையாள உருவத்திற்கும் ராம்ராஜ் செய்யும் கௌரவம். பிரீமியம் வேஷ்டியான இது, இந்தியாவில் தோன்றிய செஸ் விளையாட்டின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதமாகக் கட்டம் போட்ட பார்டரில் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.