Published:Updated:

கூடலூர்: 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்; 22 பேரின் ஆய்வு மாதிரிகள் சேகரிப்பு; அலர்ட் ஆகும் நகராட்சி!

     
டெங்கு பரிசோதனை
டெங்கு பரிசோதனை

கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீண்டுவரும் கூடலூர் மக்களிடம், டெங்கு காய்ச்சல் பரவிவரும் தகவல் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம் வயல் பகுதியைச் சேர்ந்த மக்களில் சிலருக்குக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று இல்லையென பரிசோதனை முடிவுகள் வந்ததைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடலூர் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் காசிம் வயல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

     
டெங்கு பரிசோதனை
டெங்கு பரிசோதனை

டெங்கு காய்ச்சல் குறித்து தெரிவித்த சுகாதாரத்துறையினர், ``பருவமழை பெய்துவருவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, டெங்கு கொசுக்கள் உருவாவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. தண்ணீர் தேங்காமல் வீடுகளைச் சுற்றிப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம். பயன்பாடின்றி கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். வீடுகளிலுள்ள தண்ணீர்த் தொட்டிகளில் தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்துவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு