Published:Updated:

`கொரோனா அச்சம்.. அனைவருக்கும் இலவச முகக்கவசம்..!’ - அசத்தும் மதுரை தையல் கலைஞர்

இலவசமாக முகக்கவசம்
இலவசமாக முகக்கவசம் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

சொந்தப்பணத்தை செலவு செய்து இலவசமாக முகக்கவசங்களை தயாரித்து வழங்குகிறார்.

கொரோனா அபாயத்தில் உலகமே பதற்றத்தில் இருக்கும் சூழலில் நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் தமிழகத்திலயே கொரோனாவுக்கு முதல் பலி மதுரையில் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள்.

இலவச முகக்கவசம்
இலவச முகக்கவசம்
ஈ.ஜெ.நந்தகுமார்

அதே நேரம், ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்பவர்கள் என எல்லோருக்கும் கைகழுவ கிருமி நாசினியும், முகக்கவசமும் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. அதுபோல கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சிப் பணியாளர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறை பணியாளர்கள் முகக்கவசம் இல்லாமல் பல இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

சில கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் முகக்கவசங்களை எல்லோராலும் வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை சரி செய்ய மதுரை கோச்சடை நடராஜா நகரைச் சேர்ந்த தையல் கலைஞர் சதீஷ்குமார் களம் இறங்கியுள்ளார். தன்னிடமுள்ள துணிகளை கொண்டு முகக்கவசங்களை தயாரித்து மக்களுக்கும், அரசுத் துறைகளுக்கும் இலவசமாக வழங்கிறார்.

இலவச முகக்கவசம்
இலவச முகக்கவசம்
ஈ.ஜெ.நந்தகுமார்

இதுபற்றி பேசிய சதீஷ்குமார், ''டெய்லரிங் தொழிலில் செய்து வரும் எங்களிடம் நிறைய துணிகள் மிச்சமாகும், அது மட்டுமில்லாமல் ரேஷன் கடைகளில் வாங்கி பயன்படுத்தாமல் வைத்திருக்கும் வேட்டி, சேலைகளையும் பெற்று தற்போது முகக்கவசம் தயாரிக்கிறோம். மருந்துக்கடைகளில வாங்கும் முகக்கவசங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்

ஆனால், துணியால் தயாரிக்கும் இவைகளை துவைத்து மறுபடியும் பயன்படுத்தலாம். முகக்கவசங்கள் தயாரிப்புக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் துணிகளை வழங்கினால் இன்னும் அதிகமான முகவகசங்களை இலவசமாக தைத்துக் கொடுக்க முடியும்'' என்று கூறினார்.

இலவசமாக முகக்கவசம்
இலவசமாக முகக்கவசம்
ஈ.ஜெ.நந்தகுமார்

முகக்கவசங்களை இலவசமாக கொடுத்து வரும் இந்த இக்கட்டான நேரத்தில் தையல் தொழிலாளர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ள சதிஷ்குமார், அவர்களுக்கு வழக்கம்போல் ஊதியத்தை கொடுத்து வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு