Published:Updated:

நிலத் தகறாரில் மறுக்கப்பட்ட வழி... வாய்கால் வழியாக நடந்த மூதாட்டியின் இறுதி ஊர்வலம்!

வாய்கால் வழியாக நடந்த மூதாட்டியின் இறுதி ஊர்வலம்!

கருப்பண்ணன், அவர்களின் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிலையில், ராஜம்மாளின் உடலைப் புறம்போக்கு நிலம் வழியாக எடுத்துச் செல்ல அதிகாரிகள் வலியுறுத்தினர்.

நிலத் தகறாரில் மறுக்கப்பட்ட வழி... வாய்கால் வழியாக நடந்த மூதாட்டியின் இறுதி ஊர்வலம்!

கருப்பண்ணன், அவர்களின் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிலையில், ராஜம்மாளின் உடலைப் புறம்போக்கு நிலம் வழியாக எடுத்துச் செல்ல அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Published:Updated:
வாய்கால் வழியாக நடந்த மூதாட்டியின் இறுதி ஊர்வலம்!

கரூர் அருகே இறந்த மூதாட்டியின் உடலை சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லும் வழித்தடத்தை மறித்து, அருகிலிருந்த வீட்டினர் டிராக்டர், மரம், முள்செடிகளைப் போட்டு அடைத்ததால், வாய்க்கால் மேடு பள்ளம் வழியாக உடலை எடுத்துச் சென்று, அவரின் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

டிராக்டரை வைத்து வழி அடைப்பு
டிராக்டரை வைத்து வழி அடைப்பு
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகேயுள்ள ராசாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் மனைவி ராஜம்மாள் (80). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள். இந்த நிலையில், ராஜம்மாள் உடல்நிலை சரியில்லாமல், வயோதிகம் காரணமாக இறந்துவிட்டார். நேற்று காலை அவர் உடலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல அவருடைய உறவினர்கள் முயன்றிருக்கின்றனர். அப்போது, ராஜம்மாள் வீட்டுக்கு அருகே குடியிருக்கும் கருப்பண்ணன் குடும்பத்தினர்,

அதிகாரிகளின் பேச்சுவார்த்தை
அதிகாரிகளின் பேச்சுவார்த்தை

ராஜம்மாள் உடலை எடுத்துச் செல்லும் பாதையை மறித்து டிராக்டர், மரம், செடி உள்ளிட்டவற்றைக் கொண்டு அடைத்திருக்கின்றனர். இதனால், ராஜம்மாள் உடலை எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதையடுத்து ராஜம்மாளின் உடலை அவரது வீட்டிலேயே வைத்திருந்தனர் உறவினர்கள். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த கரூர் தாசில்தார் சிவக்குமார், வெள்ளியனை காவல் நிலைய போலீஸார் ஆகியோர் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்து சுமார் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோவிந்தன், கருப்பண்ணனுக்கு இடத்தை விற்கும்போது, 'வண்டிப் பாதை உள்ளது' என்று கூறி விற்பனை செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இடத்தை வாங்கிய கருப்பண்ணன், 'இதில் நடந்து செல்வதற்கு மட்டுமே வழி' என்று குறிப்பிட்டு எழுதி வாங்கியதாகத் தெரிகிறது. வண்டிப்பாதை இருப்பதாகக் கூறி, கோவிந்தனின் மனைவி உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் உறவினர்கள் கருப்பண்ணனிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். இதனால், கருப்பண்ணன் குடும்பத்தினர், அந்த வண்டி போகும் வழித்தடத்தை டிராக்டரைக் கொண்டு அடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

உறவினர்கள் வீடு வழியாக ராஜம்மாளின் இறுதி ஊர்வலம்
உறவினர்கள் வீடு வழியாக ராஜம்மாளின் இறுதி ஊர்வலம்

இதனால், தொடர்ந்து ஐந்து மணி நேரம் கருப்பண்ணன் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தாசில்தார், காவல்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கருப்பண்ணன், அவர்களின் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிலையில், ராஜம்மாளின் உடலை புறம்போக்கு நிலம் வழியாக எடுத்துச் செல்ல அதிகாரிகள் வலியுறுத்தினர். 'வேறு வழியில்லை' எனப் புலம்பியபடி ராஜம்மாளின் உறவினர்கள், அவர் உடலை உறவினர் வீடு வழியாக ஆத்துவாரி வாய்க்கால் வழியே... மேடு, பள்ளம், முள் நிறைந்த கரடுமுரடான பாதையில் அதிக தூரம் எடுத்துச் சென்று, சுடுகாட்டில்வைத்து அடக்கம் செய்தனர்.