Published:Updated:

வெளிமாநிலங்களிலிருந்து விநாயகர் சிலைகள் - அடையாளத்தைக் காக்க வாங்கி விற்கும் கொசப்பேட்டை மக்கள்!

சே. பாலாஜி

''கொசப்பேட்டைன்னாலே விநாயகர் சிலைகளுக்குப் பிரபலம் என்கிற எங்க அடையாளத்த விட்டுடக் கூடாதுங்கிறதுக்காகதான் நாங்க பெரிய லாபமெல்லாம் பார்க்காம வெளில இருந்து வாங்கி விக்கிறோம்.''

விநாயகர் சிலை
விநாயகர் சிலை

சென்னை, புரசைவாக்கம் அருகில் உள்ளது கொசப்பேட்டை. காலங்காலமாக இங்குள்ள மக்கள் சிலை தயாரிப்பையே தங்களின் முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்புவரை விநாயகர் சதுர்த்தி என்றாலே கொசப்பேட்டைதான் அனைவரின் நினைவுக்கும் வரும். காரணம், நகரெங்கும் அலங்கரித்த பிரமாண்டமான பிள்ளையார் சிலைகள் இங்குதான் தயார் ஆகின.

விநாயகர் சிலை
விநாயகர் சிலை

ஆனால், தற்போது இந்தத் தொழில் மந்த நிலையை எட்டியுள்ளது. இதற்குத் தமிழக அரசால் விதிக்கப்பட்ட தடையே காரணம் என்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கலவைகள் கொண்டு சிலைகள் செய்வதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது. இதனால் இந்தத் தொழில் முன்பு போல விறுவிறுப்பாக நடப்பதில்லை. இதனால் இந்தத் தொழிலைவிட்டு வெளியேறியவர்கள் அநேகம்பேர்.

2004-ல் 17.79 கோடி, 2009-ல் 27.50 கோடி, 2016-ல் 95.66 கோடி! ப.சிதம்பரம் சிக்கிய கதை

தற்போது இங்குள்ள சுமார் 40 குடும்பங்கள் மட்டும் பெரிய சிலைகள் செய்வதைத் தவிர்த்துவிட்டு தங்கள் இல்லங்களிலேயே சிறு சிறு பொம்மைகளைச் செய்துவருகின்றனர். குறிப்பாக, கிருஷ்ணர், ராமர், முருகர், விநாயகர் என்று பல்வேறு கடவுள்களின் பொம்மைகளைக் குடிசைத்தொழிலாகச் செய்து வருகின்றனர். விநாயக சதுர்த்திக்குப் பிரமாண்ட சிலைகள் தயாரிப்பைக் கைவிட்டபோதிலும் கொசப்பேட்டை களை இழக்கவில்லை.

விநாயகர் சிலை
விநாயகர் சிலை

காரணம் கொசப்பேட்டையில் பெரிய சிலைகளைச் செய்ய முடியாத போதிலும் அவர்கள் இந்த சீஸன் நேரங்களில் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து அட்டைகளால் செய்யப்பட்ட சிலைகளை வாங்கி வந்து கொசப்பேட்டையில் வைத்து விற்கின்றனர்.

இது குறித்து அங்கு விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரிடம் கேட்டோம். "எங்களால விநாயகர் சிலைகளைச் செய்ய முடியாதது ரொம்பவும் வருத்தமா இருக்கு, ஏன்னா நாங்க காலம்காலமா இந்தத் தொழில செஞ்சுட்டு வர்றோம். அது மட்டுமல்லாம கொசப்பேட்டைன்னாலே விநாயகர் சிலைகளுக்குப் பிரபலம் என்கிற எங்க அடையாளத்த விட்டுடக் கூடாதுங்கிறதுக்காகதான் நாங்க பெரிய லாபமெல்லாம் பாக்காம வெளில இருந்து வாங்கி விக்குறோம்" என்றார்.

விநாயகர் சிலை
விநாயகர் சிலை

சென்னையில் வேறு எங்கும் இது போன்ற பிரமாண்டமான விநாயகர் சிலைகள் கிடைப்பதில்லை என்கிற பெருமைமட்டும் அவர்களிடம் தற்போது உள்ளது.